வீடு / சமையல் குறிப்பு / மதுரை ஸ்பெஷல் மட்டன் கறி தோசை

Photo of Madurai Street Food Spl Mutton Kari Dosa by Sumaiya shafi at BetterButter
797
0
0.0(0)
0

மதுரை ஸ்பெஷல் மட்டன் கறி தோசை

Mar-29-2019
Sumaiya shafi
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மதுரை ஸ்பெஷல் மட்டன் கறி தோசை செய்முறை பற்றி

மதுரை தெருக்கடை ஸ்பெஷல் மட்டன் தோசை

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கொத்துக்கறி 250 கிராம்
  2. இஞ்சி பூண்டு விழுது ஒரு டேபிள்ஸ்பூன்
  3. கருவேப்பிலை சிறிதளவு
  4. தேங்காய் எண்ணெய் அல்லது நெய் 3 டேபிள்ஸ்பூன்
  5. வெங்காயம் 3 பொடியாக நறுக்கியது
  6. தக்காளி 2 பொடியாக நறுக்கியது
  7. சீரகத்தூள் 1/4 டீஸ்பூன்
  8. மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன்
  9. மிளகாய் தூள் 2 டீஸ்பூன்
  10. மிளகுத்தூள் அரை டீஸ்பூன்
  11. மல்லி தூள் 1/4 டீஸ்பூன்
  12. சோம்பு தூள் கால் டீஸ்பூன்
  13. கரம் மசாலா கால் டீஸ்பூன்
  14. உப்பு தேவைக்கேற்ப
  15. முட்டை 4
  16. மல்லி இலை சிறிதளவு
  17. தோசை மாவு

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்க்கவும்
  2. பின் அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது மற்றும் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்
  4. பின் தக்காளி அதில் சேர்த்து வதக்கவும்
  5. தக்காளி நன்கு வதங்கியதும் கொத்துக்கறியை அதில் சேர்த்து கிளறவும்
  6. தனி மிளகாய் தூள், மிளகு தூள் சோம்புத் தூள், சீரகத் தூள், மல்லி தூள்,கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்
  7. பின் அதை மூடி போட்டு 10 நிமிடம் வேக விடவும்
  8. அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
  9. கறி வெந்தவுடன் மல்லி இலை சேர்த்து இறக்கவும்
  10. முட்டையை மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து அடித்து வைத்துக் கொள்ளவும்
  11. தோசை தவாவில் மாவை ஊற்றி, அடித்து வைத்த முட்டையை அதன் மேல் ஊற்றவும்.
  12. வேக வைத்த கொத்துக்கறி கலவையை அதன் மேல் சமமாக வைக்கவும்.
  13. சுற்றி நெய் ஊற்றி பின் திருப்பி போடவும்
  14. மிதமான சூட்டில் வைத்து சுட்டு எடுக்கவும்
  15. சுவையான மதுரை ஸ்பெஷல் மட்டன் கறி தோசை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்