வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் பிறங்கி

Photo of Hyderabad Street Food Spl Chicken Frankie by Sumaiya shafi at BetterButter
804
0
0.0(0)
0

சிக்கன் பிறங்கி

Mar-29-2019
Sumaiya shafi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் பிறங்கி செய்முறை பற்றி

ஹைதராபாத் தெரு கடை ஸ்பெஷல் சிக்கன் பிறங்கி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஹைதராபாத்
  • ஃபிரையிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சப்பாத்தி செய்வதற்கு
  2. மைதா 2 கப்
  3. பட்டர் 2 டேபிள்ஸ்பூன்
  4. உப்பு தேவைக்கேற்ப
  5. சிக்கன் டிக்கா செய்வதற்கு
  6. சிக்கன் போன்லெஸ் 300 கிராம்
  7. சிவப்பு மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன்
  8. இஞ்சி பூண்டு விழுது-1 டீஸ்பூன்
  9. கரம் மசாலா ஒரு டீஸ்பூன்
  10. சீரகத்தூள் அரை டீஸ்பூன்
  11. மஞ்சள் தூள் அரை டீஸ்பூன்
  12. லெமன் ஜூஸ் 2 டீஸ்பூன்
  13. ஆலிவ் ஆயில் ஒரு டேபிள்ஸ்பூன்
  14. உப்பு தேவைக்கு ஏற்ப
  15. கலர் பொடி சிறிதளவு விருப்பப்பட்டால்
  16. எண்ணெய் பொரிப்பதற்கு
  17. முட்டை நாலு
  18. மிளகுத்தூள் சிறிதளவு
  19. முட்டை கோஸ் ஒரு கப்
  20. வெங்காயம் ஒரு கப் நீட்டமாக வெட்டியது
  21. சாட் பவுடர் ஒரு டீஸ்பூன்
  22. தக்காளி சாஸ் தேவைக்கேற்ப
  23. மயோனைஸ் தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. சிக்கனை மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், சீரகத்தூள்,இஞ்சி பூண்டு விழுது மற்றும் லெமன் சேர்த்து கிளறி வைத்துக் கொள்ளவும்
  2. அரை மணி நேரம் ஊற வைக்கவும்
  3. பின் எண்ணெயில் பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்
  4. மைதா மாவு உப்பு, பட்டர் மற்றும் தண்ணீர் சேர்த்து பிசைந்து வைத்துக் கொள்ளவும்
  5. சப்பாத்தி போல் தட்டி தவாவில் போடவும்
  6. இதேபோல் எல்லாவற்றையும் போட்டு எடுத்துக் கொள்ளவும்
  7. ஒரு தவாவில் எண்ணெய் ஊற்றி முட்டையை அடித்து ஊற்றவும்
  8. அதன்மேல் சப்பாத்தியை வைக்கவும்
  9. இரண்டு பக்கமும் நன்கு வேக விடவும்
  10. இதில் சாஸ் மற்றும் மயோனைஸ் தடவவும்
  11. பின் பொரித்து வைத்த சிக்கன், முட்டை கோஸ்,சாட் மசாலா மற்றும் வெங்காயம் சேர்த்து சுருட்டவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்