வீடு / சமையல் குறிப்பு / உருளை கிழங்கு போண்டா

Photo of Potato Bonda by Umamaheswari Chellamuthu at BetterButter
416
0
0.0(0)
0

உருளை கிழங்கு போண்டா

Mar-31-2019
Umamaheswari Chellamuthu
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
4 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

உருளை கிழங்கு போண்டா செய்முறை பற்றி

உருளை கிழங்கு போண்டா அனைவரும் ருசித்து சாப்பிடும் தெருகடை உணவு என்றாலும் நீலகிரி பகுதியில் செய்யப்படும் இந்த முறையிலான உருளை கிழங்கு போண்டா குளிருக்கு ஏற்ற மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும் சுவை கொண்டது என்பதில் ஐயம் இல்லை.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ஊட்டி உருளை கிழங்கு -2
  2. கடலை மாவு -1/2 கப்
  3. மிளகாய் தூள் -1 ஸ்பூன்
  4. உப்பு -தேவையான அளவு
  5. பெருங்காயத்தூள் -1 சிட்டிகை
  6. இஞ்சி - 1 துண்டு
  7. பெரிய வெங்காயம் -1
  8. பச்சைமிளகாய் -2
  9. கடுகு - 1 டீஸ்பூன்
  10. எண்ணெய் - பொறிக்க தேவையான அளவு
  11. மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. உருளை கிழங்கை வேக வைத்து தோலுரித்து மசித்து கொள்ளவும்
  2. வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகை பொறிய விடவும்
  3. அதில் நறுக்கிய பெரிய வெங்காயம் , பொடியாக நறுக்கிய இஞ்சி ,பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்
  4. மஞ்சள் தூள் உப்பு சேர்த்து அதனுடன் மசித்த உருளை கிழங்கு சேர்த்து வதக்கி பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை ,மல்லித்தளை சேர்த்து பிரட்டி ஆற விடவும்
  5. ஒரு கிண்ணத்தில் சலித்த கடலை மாவு ,மிளகாய் தூள் ,உப்பு ,பெருங்காயத்தூள் சேர்த்து நீர் விட்டு இட்லி மாவு பதத்தில் கட்டியில்லாமல் கலக்கி வைக்கவும்
  6. அதில் செய்து வைத்துள்ள உருளை கிழங்கு மசாலாவை உருண்டைகளாக உருட்டி காய்ந்த எண்ணெய்யில் பொன்னிறமாக பொறித்து எடுக்கவும்
  7. மாலை தேனீர் அல்லது காப்பியுடன் சுவைக்க பிரமாதமாய் இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்