வீடு / சமையல் குறிப்பு / கடாய் பன்னீர்

Photo of Kadai Paneer by sagarika kv at BetterButter
5190
218
4.6(0)
1

கடாய் பன்னீர்

Oct-04-2015
sagarika kv
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • டின்னெர் பார்ட்டி
  • பஞ்சாபி
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பன்னீர் 2 கப் நறுக்கியது
  2. பெரிய அளவு வெங்காயம் 2
  3. சிவப்பு தக்காளி 4
  4. நடுத்தர அளவு குடமிளகாய் 2 (நான் ஒரு பச்சை ஒரு மஞ்சள் பயன்படுத்தினேன்)
  5. இஞ்சிப்பூண்டு விழுது 1 தேக்கரண்டி
  6. காஷ்மீர் சிவப்பு மிளகாய்கள் 6 (உங்கள் சுவைக்கேற்றபடி சேர்த்துக்கொள்ளவும்)
  7. மல்லி 2 தேக்கரண்டி
  8. முந்திரிபருப்பு 10 (விருப்பம் சார்ந்தது)
  9. புதிய கிரீம் 1/3 கப்
  10. காஷ்மீர் மிளகாய்த் தூள் சுவைக்கு
  11. கரம் மசாலா 1 தேக்கரண்டி
  12. கஸ்தூரி வெந்தயம் 1/2 தேக்கரண்டி
  13. கொத்துமல்லி கையளவு
  14. சுவைக்கேற்ற உப்பு
  15. எண்ணெய் 3 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. சிவப்பு மிளகாய் மல்லி ஆகியவற்றை வாசனை வறும்வரை வறுக்கவும். அடுப்பை நிறுத்திவிட்டு கரடுமுரடாக மிக்சியில் அரைத்துக்கொள்ளவும்.
  2. 10 நிமிடங்கள் முந்திரி பருப்பை தண்ணீரில் ஊறவைத்து சாந்தாக அரைத்துக்கொள்ளவும். (இந்த வழிமுறையைச் செய்ய முந்திரி பருப்பை நீங்கள் பயன்படுத்தப்போகிறீர்கள் என்றால், அல்லது இது தவிர்க்கவும்)
  3. ஒரு பெரிய வெங்காயத்தை அரைத்து சாந்தாக்கி, எடுத்து வைக்கவும்.
  4. தக்காளியை மென்மையானச் சாந்தாக அரைத்து எடுத்துவைக்கவும்.
  5. மீதமுள்ள வெங்காயம், பன்னீர், குடமிளகாயை நறுக்கி எடுத்துவைக்கவும்.
  6. ஒரு தேக்கரண்டி எண்ணெயை ஒரு கடாயில் சூடுபடுத்தி பன்னீர் துண்டுகளை பொன்னிறமாகும்வரை வறுத்து கடாயில் இருந்து எடுத்து வைக்கவும்.
  7. அதே கடாயில் மேலும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து வெங்காயம், குடமிளகாயை 5 நிமிடங்கள் வறுத்து கடாயில் இருந்து எடுத்துவைக்கவும். குழம்பில் இது முறுமுறுப்பானத் தன்மையைக் காய்கறிக்கு வழங்கும்.
  8. மீதமுள்ள எண்ணெயைச் சேர்த்து வெங்காயச் சாந்து, இஞ்சிப்பூண்டு விழுது சேர்த்து ஒரு நிமிடம் பச்சை வாடை போகும்வரை வதக்கவும்.
  9. இப்போது கரடுமுரடாக அரைத்த சிவப்பு மிளகாய், மல்லித்தூளைச் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
  10. தக்காளி சாந்தை கடாயில் சேர்த்து வேகவைக்கவும்.
  11. கொஞ்சம் தண்ணீர் விட்டு, மிளகாய் தூள், உப்பு, கரம் மசாலா, முந்திரி பருப்பு சாந்தைச் சேர்த்து முந்திரிபருப்பு சாந்தின் பச்சை வாடை போகும்வரை கலக்கவும்.
  12. தீயை அடக்கி கிரீம் சேர்த்து அடர்த்தியான குழம்பு வரும்வரை நன்றாகக் கலக்கவும். - இப்போது பன்னீர், வெங்காயம், குடமிளகாயை குழம்பில் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும். காய்கறிகள், பன்னீர் குழம்போடு நன்றாகக் கலக்கும்வரை. (தண்ணீரையும் சேர்க்கலாம்)
  13. கஸ்தூரி வெந்தயம் சேர்த்து நன்றாகக் கலக்கவும், இறுதியாக கொத்துமல்லி சேர்த்து அடுப்பை நிறத்தவும். சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்