அகார்ப்பாசி புடிங் | Agar Agar Pudding in Tamil

எழுதியவர் Kishorah Zaufer  |  20th Jul 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Agar Agar Pudding recipe in Tamil,அகார்ப்பாசி புடிங், Kishorah Zaufer
அகார்ப்பாசி புடிங்Kishorah Zaufer
 • ஆயத்த நேரம்

  0

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  60

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  5

  மக்கள்

102

0

அகார்ப்பாசி புடிங் recipe

அகார்ப்பாசி புடிங் தேவையான பொருட்கள் ( Ingredients to make Agar Agar Pudding in Tamil )

 • அகார்ப்பாசி /சீனப்புல்- 20 கிராம்
 • பால் - 1 கப்
 • பாதாம்/பாதாம் கூழ்- 2 தேக்கரண்டிகள்
 • சர்க்கரை -3-4 தேக்கரண்டிகள்
 • ரோஸ் மில்க் எஸ்ஸென்ஸ் - சில துளிகள் [அல்லது உங்களுக்குப் பிடித்த எஸ்ஸென்ஸ் ஏதாவது ]
 • தண்ணீர் - 1/4 கப்

அகார்ப்பாசி புடிங் செய்வது எப்படி | How to make Agar Agar Pudding in Tamil

 1. பாதாம்பருப்பை சாந்தாக அரைத்துக்கொள்ளவும், வெந்நீரில் அவற்றை ஊறவைத்து தோலை நீக்கியபிறகு.
 2. பாலைக் கொதிக்கவைத்து, பாதாம் பருப்புச் சாந்தை சேர்க்கவும். ஒன்றாகக் கலக்கவும். மீண்டும் கொதிக்கவிட்டு சர்க்கரையைச் சேர்க்கவும். கரையும் வரை கலக்கி, தீயை நிறுத்தவும்.
 3. பால்-பாதாம் கலவையின் மீன் ரோஸ் எஸ்ஸென்ஸ் சில துளிகள் சேர்க்கவும். உங்களுக்குப் பிடித்த எஸ்ஸென்சைச் சேர்க்கலாம். இவற்றில் அகர்-அகர் கலவையை ஊற்றி கலந்துவிடவும்.
 4. தட்டையான சதுரைத் தட்டில் இந்தக் கலவையை உற்றி உலரவிடவும். காயத் துவங்கியதும், முழுமையாக உலர்வதற்கு ப்ரீசருக்கு மாற்றவும். சில்லென்று பரிமாறும்போது இதன் சுவை நன்றாக இருக்கும்.
 5. கிட்டத்தட்ட அரைமணிநேரத்திற்குப் பிறகு அகர்-அகர் புட்டிங் சாப்பிடுவதற்குத் தயார். பிடித்த வடிவத்தில் அதை வெட்டிக்கொள்ளவும் (டைமண்ட் வடிவத்தில் நான் வெட்டினேன்). காற்றுப்புகாத பெட்டியில் வைத்து குளிர் சாதனப்பெட்டியில் வைக்கவும். 2-3 நாட்களுக்கு பிரிட்ஜில் கெடாமல் இருக்கும்.

எனது டிப்:

குழந்தைகளுக்குப் பிடித்தமாதிரி இருக்க நீங்கள் வெண்ணிலா எஸ்ஸெசன்சையும் உங்களுக்குப் பிடித்த உணவு நிறமி எதையாவது சேர்க்கலாம். இது அதிக நார்சத்து மிகுந்தது என்றும் குழந்தைகளை எளிதில் சாப்பிட வைக்கக்கூடியது என்று உங்களுக்குத் தெரியும்! :)

Reviews for Agar Agar Pudding in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.