வெஜிடபிள் புலாவ் | Vegetable Pulao in Tamil

எழுதியவர் Sehej Mann  |  29th Oct 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Vegetable Pulao by Sehej Mann at BetterButter
வெஜிடபிள் புலாவ்Sehej Mann
 • ஆயத்த நேரம்

  0

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  20

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  2

  மக்கள்

2674

0

வெஜிடபிள் புலாவ் recipe

வெஜிடபிள் புலாவ் தேவையான பொருட்கள் ( Ingredients to make Vegetable Pulao in Tamil )

 • இலவங்கப்பட்டை ஒரு குச்சியில் பாதி
 • 4-5 மிளகு
 • 2 கிராம்பு
 • 1 துண்டு நட்சத்திர சோம்பு
 • 1 துண்டு இலவங்கப்பட்டை
 • மசாலா சேர்வைப்பொருள்கள்:
 • சுவைக்கேற்ற உப்பு
 • 1 தேக்கரண்டி எண்ணெய்
 • 1 ஏலக்காய்
 • 1/2 இலவங்கப்பட்டை குச்சி
 • 2 கிராம்பு
 • 1 நட்சத்திர சோம்பு
 • 2 பிரிஞ்சி இலை
 • 750 மிலி தண்ணீர்
 • 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
 • 1/2 தேக்கரண்டி சீரகம்
 • 1/2 தேக்கரண்டி கரம் மசாலா தூள்
 • 1/2 தேக்கரண்டி சீரகத் தூள் (வறுத்தது)
 • 1/2 கப் காய்கறி கலவை (பட்டாணி/கேரட்/தக்காளி/காளிபிளவர்)
 • 1 சிறிய அளவிலான வெங்காயம் பொடியாக நறுக்கப்பட்டது
 • 100 கிராம் பாஸ்மதி அரிசி

வெஜிடபிள் புலாவ் செய்வது எப்படி | How to make Vegetable Pulao in Tamil

 1. சமைப்பதற்கு முள் அரிசியை 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். அதன்பிறகு தண்ணீரும் மசாலாக்களும் - பிரிஞ்சி இலை, நட்சத்திர சோம்பு சிறிய துண்டு, 2 கிராம்பு, இலவங்கப்பட்டை, ஒரு ஏலக்காய் உள்ள ஒரு பாத்திரத்தில் அரிசியைப் போடவும். அது சிம்மில் வேகட்டும்.
 2. இதற்கிடையில், மசாலா சேர்வைப்பொருள்களை வேறு எதுவும் சேர்க்காமல் வறுத்து கரடுமுரடான பவுடராக அரைத்துக்கொள்ளவும்.
 3. சாதம் வெந்ததும், ஒரு தட்டில் சமமாகப் பரப்பி ஆறவிடவும்.
 4. காய்கறிகள் வேகட்டும், அவை மிருதுவாகவும் சற்றே கடிக்கும் பதத்திலும் வரும்வரை 10 நிமிடங்கள் வேகவைக்கவும்.
 5. ஒரு கடாயை எடுத்து எண்ணெயை ஊற்றவும், எண்ணெய் சூடானது சீரகத்தை அதனுள் போடவும். விதைகள் வெடிக்க ஆரம்பித்ததும், வெங்காயத்தைப் போட்டு ஒரு நிமிடம் கலக்கவும்.
 6. அதன்பின்னர் இஞ்சி-பூண்டு விழுதோடு 1/2 தேக்கரண்டி மட்டும் மசாலாக் கலவையைச் சேர்க்கவும். மேலும் வறுத்த சீரகத் தூள் கரம் மசாலாத் தூளையும் போடவும்.
 7. கலக்கி கலந்துகொள்ளவும். சுவைக்கேற்றபடி உப்பு சேர்த்தபின், காய்கறிகளைப் போட்டு 1-2 நிமிடங்கள் வதக்கி வேகவைக்கவும்.
 8. இறுதியாக சாதத்தைச் சேர்க்கவும். ஒரு மூடியால் மூடி மேலும் 2-3 நிமிடங்கள் வேகவைக்கவும்.
 9. உங்களுக்குப் பிடித்த சைவ அசைவ குழம்புடன் சூடாகப் பரிமாறவும்.

Reviews for Vegetable Pulao in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.