ருசியானக் கேழ்வரகு அடை/ கேழ்வரகு கார அடை | Ragi savory Adai/Kezhvaragu Kaara Adai in Tamil

எழுதியவர் Priya Srinivasan  |  19th Nov 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Ragi savory Adai/Kezhvaragu Kaara Adai recipe in Tamil,ருசியானக் கேழ்வரகு அடை/ கேழ்வரகு கார அடை, Priya Srinivasan
ருசியானக் கேழ்வரகு அடை/ கேழ்வரகு கார அடைPriya Srinivasan
 • ஆயத்த நேரம்

  0

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  10

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

295

0

ருசியானக் கேழ்வரகு அடை/ கேழ்வரகு கார அடை recipe

ருசியானக் கேழ்வரகு அடை/ கேழ்வரகு கார அடை தேவையான பொருட்கள் ( Ingredients to make Ragi savory Adai/Kezhvaragu Kaara Adai in Tamil )

 • 2 கப் ராகி மாவு
 • 1/4 கப் பெருங்காயம்
 • சுவைக்கேற்ற உப்பு
 • பின்வரும் சேர்வைப்பொருள்களை அரைக்கவும்:
 • 1 பெரிய அளவு வெங்காயம்
 • 1 பெரிய அளவு தக்காளி
 • புத்தம்புதிய கொத்துமல்லி இலைகள் கையளவு
 • 2 பச்சை மிளகாய்
 • 2 கொத்து கறிவேப்பிலை
 • 1 இன்ச் இஞ்சித்துண்டு
 • 1/4 கப் புத்தம்புதிதாக துருவப்பட்ட தேங்காய்

ருசியானக் கேழ்வரகு அடை/ கேழ்வரகு கார அடை செய்வது எப்படி | How to make Ragi savory Adai/Kezhvaragu Kaara Adai in Tamil

 1. ஒரு பெரிய பாத்திரத்தில் கேழ்வரகை எடுத்து, பெருங்காயம் உப்பு சேர்க்கவும். எடுத்து வைக்கவும்.
 2. 'அரைப்பதற்கு' கீழ் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து சேர்வைப்பொருள்களையும் ஒரு மிக்சரில் சாந்தாக அரைத்துக்கொள்ளவும். அரைத்த இந்த மாவை கேழ்வரகில் சேர்த்து மிருதுவான நெகிழ்வான மாவாகத் தயாரிக்கவும். தேவைப்பட்டால் மட்டும் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றிக்கொள்ளவும்.
 3. அடை தயாரிப்பதற்கு, தவாவை சூடுபடுத்திக்கொள்ளவும். ஒரு வாழை இலையில், ஒரு பிங் பாங் அளவில் மாவை உருட்டி உங்கள் விரலால் தட்டி ஒரு மெலிதான வட்ட பட்டியைத் தட்டிக்கொள்ளவும்.
 4. சூடானத் தவாவில் ஒரு வாழை இலையைக் கவிழ்த்துப்போடவும், கேழ்வரகு டிஸ்க் தவாவைப் பார்த்திருக்கவேண்டும். வாழையிலையை மெல்ல உரித்து அடையை சூடான கடாயில் விடவும். கொஞ்சம் எண்ணெய்/நெய்விட்டு இரண்டு பக்கத்தையும் வேகவைக்கவும்.
 5. தேங்காய் சட்டினி அல்லது கொஞ்சம் ரைத்தாவோடு சிறப்பான சுவைக்கு சூடாகப் பரிமாறவும்.

எனது டிப்:

அடையைக் காரமாகத் தயாரித்தால் காரம் குறைவாக உள்ள சட்னி அல்லது வேறு எதனோடாவது எடுத்துக்கொள்ளலாம்.

Reviews for Ragi savory Adai/Kezhvaragu Kaara Adai in tamil (0)