தேங்காய் வடை | Coconut vadai in Tamil

எழுதியவர் Divya   |  3rd Oct 2017  |  
5 from 1ரிவியூ மதிப்பீடு செய்
 • Photo of Coconut vadai by Divya at BetterButter
தேங்காய் வடைDivya
 • ஆயத்த நேரம்

  30

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  20

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  6

  மக்கள்

12

1

தேங்காய் வடை recipe

தேங்காய் வடை தேவையான பொருட்கள் ( Ingredients to make Coconut vadai in Tamil )

 • தேங்காய் துருவல் 2 கப்
 • புழுங்கல் அரிசி 250 கிராம்
 • கடலைமாவு 50 கிராம்
 • காய்ந்த மிளகாய் 8
 • உப்பு தேவைக்கேற்ப
 • பெருங்காயம் சிறிது
 • எண்ணெய் பொரிப்பதற்கு தேவையான அளவு
 • கொத்தமல்லி தழை சிறிது
 • கருவேப்பிலை சிறிது

தேங்காய் வடை செய்வது எப்படி | How to make Coconut vadai in Tamil

 1. புழுங்கல் அரிசியை நன்கு கழுவி 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
 2. தண்ணீர் நன்கு வடித்து விட்டு மிக்ஸியில் போட்டு கொற கொறப்பாக ஒரே ஒரு சுற்று விட வேண்டும்.
 3. இதனுடன் தேங்காய், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து கொற கொறப்பாக அரைக்கவும்.
 4. பிறகு கடலைமாவு, நறுக்கிய கொத்தமல்லி தழை, கருவேப்பிலை அரைத்த மாவுடன் சேர்த்து நன்கு கலந்து சிறு வடைகளாக தட்டி எண்ணெய்யில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

எனது டிப்:

அரைக்கும் போது தண்ணீர் சேர்க்க வேண்டாம்.

Reviews for Coconut vadai in tamil (1)

Saranya Manickam2 years ago

Wonderful
Reply

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.