வீடு / சமையல் குறிப்பு / இளநீர் வழுக்கை பாயாசம்

Photo of Tender coconut kheer by Asiya Omar at BetterButter
434
3
0.0(0)
0

இளநீர் வழுக்கை பாயாசம்

Oct-10-2017
Asiya Omar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

இளநீர் வழுக்கை பாயாசம் செய்முறை பற்றி

இளநீர் வழுக்கையுடன் சுண்டக்காய்ச்சிய பால், ஏலம் விரும்பினால் தேங்காய்பாலும் சேர்த்து இந்த பாயாசம் செய்யலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • கேரளா
  • சில்லிங்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. இளநீர் ஒரு காயில் உள்ளது- ஒரு கப்
  2. வழுக்கை - ஒரு காயில் எடுத்தது
  3. சுண்டக்காய்ச்ச - 250 மில்லி பால்
  4. ஏலக்காய் -2
  5. சீனி - 2 தேக்கரண்டி
  6. தேங்காய்ப்பால் - அரை கப்
  7. நெய் 1 தேக்கரண்டி
  8. பாதாம் முந்திரி பிஸ்தா - சிறிது
  9. புட்டிங் போல் செய்வதாய் இருந்தால் கொஞ்சம் கடல்பாசி காய்ச்சி சேர்க்கவும்.

வழிமுறைகள்

  1. முதலில் இளநீர், வழுக்கை எடுத்து வைக்கவும்.
  2. இளநீர் சிறிது சேர்த்து வழுக்கையை கொரகொரப்பாக அரைக்கவும்.
  3. அரைத்தால் இப்படி இருக்கும்.
  4. 250 மில்லி பாலை சுண்டக் காய்ச்சவும்.
  5. இரண்டு ஏலக்காய் கீறி போட்டு காய்ச்சவும். அதனுடன் அரைத்த இளநீர், இளநீர் வழுக்கையைச் சேர்க்கவும்.
  6. சிம்மில் வைத்து கொதிக்க விடவும். விரும்பினால் கெட்டி தேங்காய்ப்பால் அரை கப் சேர்க்கலாம். ஏலக்காய் கொதித்த பின் எடுத்து விடலாம்.
  7. பாதாம், பிஸ்தா, முந்திரி பொடியாக நறுக்கவும்.
  8. நெய்யில் லேசாக வறுத்து எடுக்கவும்.
  9. தயார் ஆன பாயாசத்தில் போடவும்.
  10. விரும்பினால் இதில் சிறிது கடல்பாசி, தண்ணீர் சேர்த்து காய்ச்சி சேர்த்தால் செமையாக புட்டிங் போல் அல்லாமல் பாயாசம் போலும் சுவையாக இருக்கும்.
  11. பௌலில் விட்டு பரிமாறவும். பரிமாறும் பொழுது நட்ஸ் இன்னும் மேலே தூவி அசத்தலாம். சுவையான யம்மி பாயாசம் தயார். பிரிட்ஜில் வைத்து ஜில்லென்று பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்