தேங்காய் பால் சொதி | Sothi in Tamil

எழுதியவர் Surya Rajan  |  11th Oct 2017  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Sothi recipe in Tamil,தேங்காய் பால் சொதி, Surya Rajan
தேங்காய் பால் சொதிSurya Rajan
 • ஆயத்த நேரம்

  10

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  15

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  3

  மக்கள்

5

0

தேங்காய் பால் சொதி recipe

தேங்காய் பால் சொதி தேவையான பொருட்கள் ( Ingredients to make Sothi in Tamil )

 • தேங்காய் துருவியது  : ½  மூடி ( தேங்காய் பால் எடுப்பதற்கு )
 • முதல்  தேங்காய் பால் : 1 கப்
 • இரண்டாம் தேங்காய் பால் : 1 கப்  
 • உப்பு : தேவையான அளவு
 • கடுகு : ½ மேஜைக்கரண்டி
 • தேங்காய் எண்ணெய் : 2 - 3 மேஜைக்கரண்டி
 • கருவேப்பிலை
 • கேரட்  : 1
 • பீன்ஸ்  : 5
 • உருளைக்கிழங்கு  : 1
 • பெரிய வெங்காயம் : 1
 • பாசி பருப்பு : 1 - 1 ½ கையளவு
 • மஞ்சள் : ¼ மேஜைக்கரண்டி
 • அரைக்க :
 • பச்சை மிளகாய்  : 2
 • சீரகம் : 1 மேஜைக்கரண்டி
 • இஞ்சி : ½ இன்ச்

தேங்காய் பால் சொதி செய்வது எப்படி | How to make Sothi in Tamil

 1. பாசி பருப்பை மசியும் அளவு வேக வைத்து தனியே வைக்கவும்
 2. காய்கறிகள் கேரட் , பீன்ஸ் , உருளைக்கிழங்குஐ வேக வைத்து தனியே வைக்கவும்
 3. இஞ்சி , சீரகம் , மிளகாய் ஆகியவற்றை அரைத்து வைத்து கொள்ளவும் .
 4. அடுப்பில் வாணலிஐ வைத்து தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு , கருவேப்பிலை போட்டு தாளிக்கவும் .
 5. பின் வெங்காயம்  சேர்த்து வதக்கவும்
 6. வெங்காயம் வதங்கியதும் அரைத்து வைத்துள்ள சீரகம், இஞ்சி,  பச்சை மிளகாய் போட்டு 1 நிமிடம் வதக்கவும் .
 7. பின் வேக வைத்த காய்கறிகள் சேர்த்து  1 நிமிடம்  வதக்கவும்
 8. வேக வைத்த பாசி பருப்பு , உப்பு, மஞ்சள் , இரண்டாம் தேங்காய்  பால் சேர்த்து 2 - 3 நிமிடம் வேக வைக்கவும் .
 9. பின் அடுப்பை அனைத்து விட்டு முதல் தேங்காய் பால் சேர்க்கவும் .

எனது டிப்:

இஞ்சி துவையல் உடன் சொதி சாப்பிட்டால் ஜீரணத்திற்கு நல்லது .

Reviews for Sothi in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.