வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் முருங்கை புலவ்

Photo of MORINGA PULAO by இராஜபுஷ்பா  at BetterButter
219
3
0.0(0)
0

தேங்காய் முருங்கை புலவ்

Oct-12-2017
இராஜபுஷ்பா
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் முருங்கை புலவ் செய்முறை பற்றி

தேங்காய்ப்பால் முருங்கை சாறு புலவ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. தேங்காய் 1/2 மூடி
  2. பாசுமதி அரிசி ஒரு கப்
  3. முருங்கை கீரை ஒரு கப்
  4. பல்லாரி வெங்காயம் 1
  5. முந்திரி 10
  6. பூண்டு பல் 3
  7. இஞ்சி சிறு துண்டு
  8. பட்டை ஒரு துண்டு
  9. கிராம்பு ஏலம் தலா 3
  10. அன்னாசிப்பூ 2
  11. பிரிஞ்சி இலை- 1
  12. ஜாதிபத்திரி சிறிது
  13. பனங்கற்கண்டு 2 தேக்கரண்டி
  14. நெய் 3 தேக்கரண்டி
  15. தேங்காய் எண்ணெய் 1 தேக்கரண்டி
  16. பச்ச மிளகாய் 2
  17. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. தேங்காய் துருவி பால் எடுத்துக்கொள்ளவும்.
  2. முருங்கை கீரை யில் இரண்டு கப் தண்ணீர் இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து ஒரு கப் வரும்வரை கொதிக்க வைத்து வடிகட்டி கொள்ளவும்
  3. பல்லாரியை நறுக்கி தேங்காய் எண்ணெயில் முறுகலாக வறுத்து கொள்ளவும்
  4. பாசுமதி அரிசியை அலசி 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும்
  5. வாணலியில் நெய் விட்டு பட்டை கிராம்பு ஏலம் ஜாதி பத்ரி அன்னாசிப்பூ பிரிஞ்சி இலை சேர்த்து தாளித்து துருவிய இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  6. வறுத்த முந்திரி பாசுமதிஅரிசி சேர்த்து சிறிது நேரம் வதக்கவும் இறக்கவும்.
  7. ஒரு கப் அரிசிக்கு ஒன்றேகால் கப் அளவில் சம அளவு முருங்கை சாறும் தேங்காய் பாலும் எடுத்துக்கொள்ளவும்.
  8. இவற்றை குக்கருக்கு மாற்றி தேவையான அளவு பனங்கற்கண்டு உப்பு சேர்த்து ஒரு விசில் வந்ததும் பத்து நிமிடம் குறைந்த தீயில் வைத்து இறக்கவும். வறுத்த பல்லாரியை தூவி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்