சைவ நாசி லேமாக் | Vegetarian Nasi Lemak in Tamil

எழுதியவர் Poonam Bachhav  |  30th Dec 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Vegetarian Nasi Lemak by Poonam Bachhav at BetterButter
சைவ நாசி லேமாக்Poonam Bachhav
 • ஆயத்த நேரம்

  10

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  20

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  2

  மக்கள்

16

0

Video for key ingredients

  சைவ நாசி லேமாக் recipe

  சைவ நாசி லேமாக் தேவையான பொருட்கள் ( Ingredients to make Vegetarian Nasi Lemak in Tamil )

  • மசாலா சேர்த்த காய்கறிகள் (பிரெஞ்ச் பீன்ஸ், கேரட் குச்சிகள் கொஞ்சம் மிளகாய்ச் சாந்து உப்போடு கிளறவும்
  • 3-4 தேக்கரண்டி வேர்கடலை (வானலியில் 1/2 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து மொறுமொறுப்பாக நறுமணத்தோடு வறுக்கவும்)
  • தாளிப்பு: 1 வெள்ளரி, மெல்லிய துண்டுகளாக நறுக்கியது
  • சுவைக்கேற்ற உப்பு
  • 2 தேக்கரண்டி புளிச்சாறு
  • 1 தேக்கரண்டி சர்க்கரை
  • 2 தேக்கரண்டி எண்ணெய்
  • 1 வெங்காயம், துண்டுகளாக அல்லது வளையமாக நறுக்கியது
  • லெமன்கிராஸ் தாள்கள் கொஞ்சம்
  • 5-6 சின்ன வெங்காயம்
  • 3-4 பூண்டு பற்கள்
  • சம்பளுக்கானப் பொருள்கள்: 8-10 உலர் சிவப்பு மிளகாய்கள் (ஒவ்வொரு மிளகாயையும் 2-3 துண்டுகளாக வெட்டி வெந்நீரில் உறவைக்கவும்)
  • சுவைக்கேற்ற உப்பு
  • லெமன்கிராஸ் தாள்கள் கொஞ்சம்
  • இஞ்சி 1/2 இன்ச் துண்டு, நீளவாக்கில் நறுக்கியது
  • 3ல் இருந்து பந்தன் (திருகுப்பைன்) இலைகள் சற்றே உதிர்த்து முடிச்சிட்டுக் கட்டப்பட்டது
  • 1 1/2 கப் தண்ணீர்
  • 1 கப் நீர்க்காத தேங்காய்ப் பால்
  • சாதத்திற்கான பொருள்கள்: 1 கப் மல்லிகை வாசனையுடைய சாதம் (கழுவி வடிகட்டியது)

  சைவ நாசி லேமாக் செய்வது எப்படி | How to make Vegetarian Nasi Lemak in Tamil

  1. அரிசி குக்கர் பானையில்அரிசியைத் தண்ணீரோடுப் போடவும் தேங்காய்ப்பால், இஞ்சி, லெமன்கிராஸ், கட்டப்பட்ட பந்தன் இலைகள். உப்பு தெளித்து நன்றாகக் கலந்துகொள்ளவும். அரிசியை வேகவைத்து முள் கரண்டியால் கிளறி பரிமாறும் வரைச் சூடாக வைத்திருக்கவும்.
  2. ஊறவைத்த மிளகாயை வடிக்கட்டி சின்ன வெங்காயத்தோடு அரைத்துக்கொள்ளவும். பூண்டையையும் நறக்கிய லெமன்கிராஸ் தாளையும் சாந்தாக அரைத்துக்கொள்க. அரைக்கும்போது கொஞ்சம் தண்ணீர் பயன்படுத்திக்கொள்ளவும்.
  3. ஒர வறுவல் பாத்திரத்தில் அல்லது வானலியில் மிதமானச் சூட்டில் சமையல் எண்ணெயைச் சூடுபடுத்தி இந்த பிளண்ட் செய்யப்பட்ட சாந்தை 7-10 நிமிடங்கள் வறுத்துக்கொள்க. வெங்காய வளையங்களைச் சேர்த்து 2-3 நிமிடங்களக்கு மேல் வறுத்துக்கொள்ளவும். தேவையானப் பதத்தை அடைவதற்குத் தண்ணீரைச் சேர்க்கவும்.
  4. புளிச்சாறு சேர்த்து உப்பு சர்க்கரையால் சுவையூட்டவும். நன்றாகக் கலக்கி அடுப்பை நிறுத்தவும்.
  5. ஒரு பரிமாறம் டிரேயில், சத்தமான வாழையிலையை மெழுகுத்தாளால் லைனிங் கொடுக்கவும். ஒரு கிண்ணத்தைப் பயன்படுத்தி, சாதத்தை வடிவமைத்து இந்த இலையி்ல் வைக்கவும். சம்பலைக் கரண்டியில் எடுத்து சாதத்தின் பக்கத்தில் வைத்து சில துண்டுகள் வெள்ளரி, வானலியில் வறுத்த வேர்கடலை சிலவற்றையும் மசாலா சேர்த்தக் காய்கறிகளையும் வைக்கவும்.
  6. சூடாகப் பரிமாறவும்.

  எனது டிப்:

  வழக்கமாக சாதம் பந்தன் இலைகளோடு (திருகு பைன் இலைகள்) சமைக்கப்படுவது உணவுக்குத் தனிச்சிறப்புடைய ருசியை கொடுக்கிறது.

  Reviews for Vegetarian Nasi Lemak in tamil (0)

  சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.