வீடு / சமையல் குறிப்பு / கொழுக்கட்டை (பாரம்பரிய பண்டம்)

Photo of Kozhukattai by Rifana Sherin at BetterButter
1099
8
0.0(0)
0

கொழுக்கட்டை (பாரம்பரிய பண்டம்)

Oct-24-2017
Rifana Sherin
1800 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
7 மக்கள்
பரிமாறவும்

கொழுக்கட்டை (பாரம்பரிய பண்டம்) செய்முறை பற்றி

கன்னியாகுமாரி மாவட்டத்தில் எங்கள் ஊரில்(தக்கலை) பிறந்த குழந்தைகளுக்கு முதல் பல் முளைத்ததும் இதை தாய் வீட்டு கொண்டாட்டமாக அனைவருக்கும் கொடுத்து மகிழ்வார்கள்...

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தீபாவளி
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • அப்பிடைசர்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 7

  1. பச்சரிசி மாவு வருத்தது 1 உழக்கு
  2. 1 சிறிய தேங்காய்
  3. வெல்லம் 1/2 கிலோ (நாட்டு சர்க்கரை)
  4. ஏலக்காய் 3
  5. சுக்கு பொடித்தது 1/4 மேஜைக்கரண்டி
  6. பாசிப்பருப்பு 1/4 டம்ப்ளர் இருந்து குறைவாக
  7. தேவையான அளவு தண்ணீர்

வழிமுறைகள்

  1. முதலில் பாசிப்பருப்பு வறுத்து வைக்க வேண்டும்
  2. ஒரு பரந்த பாத்திரத்தில் சர்க்கரையை தவிர மற்ற அனைத்து பொருட்களையும் கலந்து வைக்க வேண்டும் ....
  3. அடிகனம் உள்ள பாத்திரத்தில் நாட்டு சர்க்கரையுடன் (வெல்லம்) 1/4 டம்ப்ளர் தண்ணீர் ஊற்றி அடிப்பிடிக்காமல் நன்றாக உருக்கவும் ...
  4. உருக்கியதும் சூடாகவே வடிக்கட்டி உடனேயே....கலந்து வைத்த அரிசி மாவில் விட்டு கிளறி கை பொறுக்கும் சூட்டில் நன்றாக விரவி சிறிய கொழுக்கட்டைகளாக பிடிக்கவும் .....
  5. இட்லி தட்டு அல்லது இடியாப்ப தட்டில்வைத்து அவித்து வேகவிட்டு எடுக்கவும்...

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்