பருப்பு வடை | Dal Vada in Tamil

எழுதியவர் Janaki Priya  |  26th Oct 2017  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Dal Vada by Janaki Priya at BetterButter
பருப்பு வடைJanaki Priya
 • ஆயத்த நேரம்

  3

  1 /4 மணிநேரம்
 • சமைக்கும் நேரம்

  20

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  6

  மக்கள்

5

0

பருப்பு வடை recipe

பருப்பு வடை தேவையான பொருட்கள் ( Ingredients to make Dal Vada in Tamil )

 • கடலைபருப்பு - 1 கப்
 • துவரம்பருப்பு- 1/2 கப்
 • காய்ந்த சிகப்பு மிளகாய் - 7
 • சீரகம் - 1 தேக்கரண்டி
 • நல்லமிளகு - 1 தேக்கரண்டி
 • பட்டை- சிறிய துண்டு
 • பெருங்காயத்தூள்- சிறிதளவு
 • பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - 1 தேக்கரண்டி
 • பொடியாக நறுக்கிய இஞ்சி -1 தேக்கரண்டி
 • பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
 • பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு
 • எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
 • உப்பு - தேவையான அளவு

பருப்பு வடை செய்வது எப்படி | How to make Dal Vada in Tamil

 1. ஒரு பாத்திரத்தில் கடலைபருப்பு மற்றும் துவரம்பருப்பு இரண்டையும் சேர்த்து நன்கு கழுவி சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்.
 2. பின்பு இதனுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து பருப்புகள் முழ்கும் வரை தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
 3. 3 மணி நேரத்திற்கு பின், தண்ணீரை வடிகட்டி பருப்பை சற்று நேரம் உலர வைக்கவும்.தற்போது பருப்புகள் தண்ணீரில்   ஊறியதால் சற்று பெரிதாகிருக்கும்
 4. பின் மிக்ஸியில் பருப்பு, காய்ந்த மிளகாய், சீரகம், நல்ல மிளகு, சிறிது இஞ்சி, பட்டை துண்டு, பெருங்காயத்தூள், சிறிது உப்பு ஆகியவற்றை சேர்த்து , தண்ணீர் சேர்க்காமல் கரகரப்பாக அரைத்து, ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ளவும்.
 5. இதனுடன் பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், இஞ்சி, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலந்து வைத்து கொள்ளவும். தேவையென்றால் சிறிது உப்பு சேர்த்து கொள்ளலாம்.  பருப்பு வடைக்கான மாவுக்கலவை தயார்.
 6. ஒரு தட்டத்தில், எலுமிச்சை அளவு உருண்டை மாவை கையில் எடுத்து அதை சிறிது வடை போல் தட்டி தட்டில் அடுக்கி வைத்து கொள்ளவும்.
 7. சூடான வாணலியில் எண்ணெய் ஊற்றி, அது காய்ந்ததும் தட்டி வைத்துள்ள வடைகளை போட்டு, இரண்டு பக்கமும் திருப்பி போட்டு வேகும் வரை பொரித்து எடுக்கவும்.
 8. சுவையான மொறுமொறுப்பான பருப்பு வடை தயார்!!! தேங்காய் சட்னி அல்லது கொத்தமல்லி சட்னியுடன் சாப்பிட ருசி இன்னும் மிக அருமையாக இருக்கும்.

எனது டிப்:

அரைத்த மாவு சற்று தளர்வாக இருந்தால் சிறிது அரிசி மாவு கலந்து கொள்ளலாம். வடைகளும் மொறுமொறுப்பாக வரும்.

Reviews for Dal Vada in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.