வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பூ வடை

Photo of Banana Flower Vadai by Jayasakthi Ekambaram at BetterButter
822
3
0.0(0)
0

வாழைப்பூ வடை

Nov-07-2017
Jayasakthi Ekambaram
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

வாழைப்பூ வடை செய்முறை பற்றி

நறுக்கிய வாழைப்பூவும் கடலைப்பருப்பு மாவும் கலந்து செய்யும் வடை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கடலைப்பருப்பு 200 கிராம்
  2. வாழைப்பூ 1
  3. பெரிய வெங்காயம் 2
  4. பச்சை மிளகாய் 4
  5. இஞ்சி ஒரு சிறிய துண்டு
  6. பூண்டு 6 பற்கள்
  7. சோம்பு 1 ஸ்பூன்
  8. கருவேப்பிலை
  9. கொத்தமல்லி
  10. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கடலைப் பருப்பை கழுவி 1 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. வெங்காயம், கருவேப்பிலை, கொத்தமல்லி இலைகளை சுத்தம் செய்து அலசி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  3. வாழைப்பூவை சுத்தம் செய்து தண்ணீரில் அலசி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  4. நன்றாக ஊறிய பின் கடலை பருப்பையும் , பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டையும் மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.
  5. நறுக்கிய வாழைப்பூவையும் மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று ஓட்டவும்.
  6. பருப்பு மாவில் நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, கருவேப்பிலை, வாழைப்பூ, உப்பு தூள் எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு கலக்கவும்.
  7. வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடு செய்யவும்.
  8. எண்ணெய் நன்றாக காய்ந்ததும் வடைகள் தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்