வீடு / சமையல் குறிப்பு / Uluvakkanji (Sweet Urad Dal Porridge)

Photo of Uluvakkanji (Sweet Urad Dal Porridge) by Raihanathus Sahdhiyya at BetterButter
22
4
0.0(1)
0

Uluvakkanji (Sweet Urad Dal Porridge)

Nov-07-2017
Raihanathus Sahdhiyya
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

 • மீடியம்
 • தமிழ்நாடு
 • பிரெஷர் குக்
 • ப்லெண்டிங்
 • பாய்ளிங்
 • சூப்கள்
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

 1. உளுந்து (Urad Dal )- 2 மேசைக்கரண்டி
 2. வெந்தயம் (Fenugreek) - 2 தேக்கரண்டி
 3. பாசிப்பருப்பு - 1 மேசைக்கரண்டி
 4. அரிசி -1 மேசைக்கரண்டி
 5. பூண்டு ( Garlic) - 5 பல்
 6. கருப்பட்டி (Palm Jaggery) - சுவைக்கேற்ப
 7. தேங்காய்ப் பால் (Coconut Milk) - 150 மிலி (1கப்)
 8. நாட்டுக்கோழி முட்டை - 2

வழிமுறைகள்

 1. முதலில் அரிசி, வெந்தயம், உளுந்து,பாசிப்பருப்பு, பூண்டு, உளுந்து ஆகியவற்றை குக்கரில் தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவிடவும்.
 2. பின்பு அக்கஞ்சியை ஒரு பாத்திரத்தில் ஊற்றி ஆறவிடவும்.
 3. அதற்குள், ஒரு பாத்திரத்தில் கருப்பட்டியை தண்ணீர் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.
 4. ஆறிய கஞ்சியை மிக்சியில் ஊற்றி அரைத்துக் கொள்ளவும்.
 5. அரைத்த அந்த கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி மீண்டும் அடுப்பில் ஏற்றவும்.
 6. கருப்பட்டியை வடிகட்டி பிறகு அதை அடுப்பில் இருக்கும் கஞ்சியில் சேர்க்கவும். கைவிடாமல் சற்று கவனமுடன் ஒரு கரண்டி கொண்டு கலக்கிக் கொண்டே இருக்கவும்
 7. அடுத்ததாக, இரண்டு நாட்டுக் கோழி முட்டைகளை பீட் செய்து கஞ்சியில் சேர்க்கவும். (நேரடியாக சேர்த்து கலக்கிவிட்டால் முட்டை சிறுசிறு துண்டுகளாக வெந்து விடும்.)
 8. சற்று நேரம் நன்றாக வேகவிட்டு, பின்பு இறுதியாக தேங்காய்ப் பால் சேர்த்து ஓரிரு முறை மட்டும் கலக்கிவிட்டு அடுப்பிலிருந்து இறக்கிவிடவும். (தேங்காய்ப் பால் சேர்த்து வெகு நேரம் அடுப்பில் வைத்தால் கஞ்சியின் சுவையும் கெட்டு விடும் .தேங்காய்ப்பாலும் திரிந்தது போல் ஆகிவிடும்.)

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Saranya Manickam
Nov-10-2017
Saranya Manickam   Nov-10-2017

hi, Kindly share the link in betterbutter tamil group.

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்