Photo of Rawa kesari by saranya sathish at BetterButter
840
2
0.0(0)
0

ரவை கேசரி

Nov-09-2017
saranya sathish
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ரவை கேசரி செய்முறை பற்றி

ரவையில் செய்யபட்ட ஒரு இனிப்பான மாலை நேர சிற்றுண்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ரவை - 1 கப் (100 கிராம்)
  2. சர்க்கரை - 2 கப் (200 கிராம்)
  3. நெய் - 5 மேஜைக்கரண்டி
  4. தண்ணீர் - 2 கப் (200 மில்லி)
  5. முந்திரி பருப்பு - 10
  6. காய்ந்த திராட்சை -10
  7. ஏலக்காய்த் தூள் -1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் ரவையைப் போட்டு நன்றாக வறுத்து தனியே எடுத்து  வைக்கவும். சிம்மில் வைத்து கருக விடாமல் வறுக்கவும்.
  2. கடாயில் ஒரு மேஜைக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும் முந்திரி பருப்பு, காய்ந்த திராட்சை போட்டு வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.
  3. 2 கப் தண்ணீர், ஒரு மேஜைக்கரண்டி நெய், போட்டு கொதிக்க விட வேண்டும். நன்கு கொதித்ததும் ரவையைப் போட்டு கை விடாமல் கிளறவும்.
  4. ரவை நன்கு வெந்ததும் 2 கப் சர்க்கரையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்கு கை விடாமல் கிளறவும்.
  5. நன்கு சுருள வதங்கியதும், வதக்கிய முந்திரி பருப்பு, காய்ந்த திராட்சை, ஏலக்காய் பவுடர், மீதமுள்ள நெய் எல்லாவற்றையும் போட்டு நன்கு கிளறி இறக்கி விடவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்