வீடு / சமையல் குறிப்பு / குலாப் ஜாமுன் புட்டிங்

Photo of Gulab Jamun Pudding by Hameed Nooh at BetterButter
75
11
0.0(0)
0

குலாப் ஜாமுன் புட்டிங்

Nov-16-2017
Hameed Nooh
180 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

குலாப் ஜாமுன் புட்டிங் செய்முறை பற்றி

குலாப் ஜாமுன் விரும்பாத குழந்தைகள் இல்லை எனலாம் அதிலும் இந்த புட்டிங்கோடு கொடுத்தால் இன்னும் கொண்டாட்டம் தான்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஷாலோ ஃபிரை
  • பாய்ளிங்
  • சில்லிங்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. குலாப் ஜாமுன் செய்ய :
  2. பால் பவுடர் - 2 கப்
  3. சர்க்கரை - 4 கப்
  4. மைதா - 1 மேசைக்கரண்டி
  5. நெய் - 2 மேசைக்கரண்டி
  6. பால்  -  சிறிதளவு
  7. பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி
  8. ஏலக்காய் - 4
  9. எண்ணெய் - பொறிக்க
  10. கஸ்டர்டு புட்டிங் செய்ய :
  11. பால் - 1/2 லிட்டர்
  12. சீனி - சுவைக்கேற்ப
  13. கஸ்டர்டு பவுடர் - 3 மேசைக்கரண்டி
  14. நட்ஸ் மிட்டாய் (brittles) -- 1/2 கப் ( பொடித்தது)

வழிமுறைகள்

  1. குலாப் ஜாமுன் செய்முறை : பால் பவுடருடன் பேக்கிங் பவுடர் மைதா நெய் சேர்த்து போதுமான அளவு பால் ஊற்றி மிருதுவாக பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும்.
  2. ஒரு பாத்திரத்தில் சீனியோடு அதே அளவு தண்ணீர் ஊற்றி ஏலக்காய் போட்டு அடுப்பில் வைத்து ஒரு கம்பி பதம் வரும் வரை காய்ச்சவும்.
  3. வாணலியில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி காய்ந்ததும் உருண்டைகளைப் போட்டு பொன்னிறமாக பொறித்தெடுத்து சீனி பாகில் 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
  4. கஸ்டர்டு புட்டிங் செய்முறை : முதலில் கஸ்டர்டு பவுடரை சிறிதளவு பாலில் நன்றாக கலக்கவும்.
  5. பாலை அடுப்பில் வைத்து சூடேறியதும் சிறிதளவு எடுத்து கஸ்டர்டு கலவையில் ஊற்றி கலக்கவும்.
  6. இப்பொழுது அடுப்பில் உள்ள பாலில் ஊற்றி சுவைக்கேற்ப சீனியைப் போட்டு கொஞ்சம் கெட்டியாகும் வரை காய்ச்சவும்.
  7. சூடாக இருக்கும் போதே விரும்பிய பாத்திரத்தில் ஊற்றி குலாப் ஜாமுனை வைத்து நொறுக்கிய மிட்டாயை தூவி ப்ரிட்ஜில் வைத்து எடுத்து சாப்பிடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்