வீடு / சமையல் குறிப்பு / மடக்கு கொழுக்கட்டை

Photo of Folded Kozhukattai by Hameed Nooh at BetterButter
414
4
0.0(0)
0

மடக்கு கொழுக்கட்டை

Nov-17-2017
Hameed Nooh
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மடக்கு கொழுக்கட்டை செய்முறை பற்றி

தினமும் இட்லி, தோசை, உப்மா என்று சலிப்பில் சாப்பிடும் குழந்தைகளுக்கு ஆரோக்யமான இந்த கொழுக்கட்டை காலையில் சாப்பிட உகந்தது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அரிசிமாவு - 1 கப்
  2. தேங்காய்ப்பூ - 3 கப்
  3. பொடித்த கருப்பட்டி அல்லது சர்க்கரை - 1 கப்
  4. பாசிப்பருப்பு - 25 கிராம்
  5. ட்ரை ப்ரூட்ஸ் - 1/2 கப்
  6. ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி
  7. உப்பு - ஒரு சிட்டிகை

வழிமுறைகள்

  1. முதலில் அரிசிமாவுடன் ஒரு கப் தேங்காய்ப்பூ,உப்பு, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. பாசிப்பருப்பை மிதமான சூட்டில் வறுத்து மீதமுள்ள தேங்காய்ப்பூ, பொடித்த கருப்பட்டி அல்லது சர்க்கரை, பொடிதாய் நறுக்கிய ட்ரை ப்ரூட்ஸ் மற்றும் ஏலக்காய் தூளோடு கலந்து பத்து நிமிடங்கள் வைக்கவும்.
  3. ஊறிய அரிசி மாவை சம பங்குகளாக பிரித்து உருண்டைகளாக பிடித்து அதனை தட்டி நடுவில் பூரணத்தை வைத்து இரண்டாக மடித்து ஓரங்களை கவனமாக மூடவும்.
  4. இதனை இட்லி சட்டியில் பத்து நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்