சில்லி பன்னீர் | Chilly Paneer in Tamil

எழுதியவர் Anushka Basantani  |  6th Jul 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Chilly Paneer by Anushka Basantani at BetterButter
சில்லி பன்னீர்Anushka Basantani
 • ஆயத்த நேரம்

  0

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  30

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

6275

0

சில்லி பன்னீர் recipe

சில்லி பன்னீர் தேவையான பொருட்கள் ( Ingredients to make Chilly Paneer in Tamil )

 • 250 கிராம் பன்னீர் துண்டுகள்
 • 1 பெரிய வெங்காயத் துண்டு
 • 1 பெரிய சிவப்பு மணி மிளகுத் துண்டு
 • 6-8 பூண்டு பற்கள் நறுக்கியது
 • 1 இன்ச் துண்டு இஞ்சி நறுக்கியது
 • 2-3 பச்சை மிளகாய் நீளவாக்கில் நறுக்கியது
 • சுவைக்கேற்ற உப்பு
 • 2 தேக்கரண்டி தக்காளி கெச்சப்
 • 1 தேக்கரண்டி மிளகாய் சாஸ்
 • 1 தேக்கரண்டி பச்சை மிளகாய் சாஸ்
 • 1 தேக்கரண்டி சோயா சாஸ்
 • 1 தேக்கரண்டி வெனிகர்
 • எண்ணெய்

சில்லி பன்னீர் செய்வது எப்படி | How to make Chilly Paneer in Tamil

 1. ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தி பன்னீரைப் பொன்னிறமாக வறுக்கவும்.
 2. 2 தேக்கரண்டி எண்ணெயை இன்னொரு கடாயில் எடுத்து பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்க்கவும்.
 3. ஒன்றல்லது இரண்டு நிமிடங்கள் வதக்கி வெங்காயம் சேர்க்கவும்.
 4. மணி மிளகு, உப்பு சேர்த்து அனைத்து சாஸ்களையும் ஒன்றாகச் சேர்க்கவும்.
 5. 2-3 நிமிடங்கள் வேகவைத்து வறுத்த பன்னீர் சேர்த்து கிளறவும்.
 6. கொத்துமல்லியால் அலங்கரித்து சூடாகப் பரிமாறவும்.

Reviews for Chilly Paneer in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.