வீடு / சமையல் குறிப்பு / அவல் நவதானிய ஸவீட் ஸ்மைலி

Photo of Poha Multigrain Sweet Smiley by Krishnasamy Vidya Valli at BetterButter
814
2
0.0(0)
0

அவல் நவதானிய ஸவீட் ஸ்மைலி

Nov-20-2017
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

அவல் நவதானிய ஸவீட் ஸ்மைலி செய்முறை பற்றி

அவல் மற்றும் நவதானியங்கள் உடலுக்கு மிகவும் சிறந்தது. இவற்றை வைத்து செய்யும் எளிமையான இனிப்பு வகை இது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஃப்யூஷன்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. அவல் - 1 / 2 கப்
  2. நவதானிய மாவு/மல்டி கிரன் கஞ்சி மாவு - 1/2 கப்
  3. பாதாம் மற்றும் முந்திரி பருப்புகள் - தலா 8 முதல் 10
  4. தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி
  5. நாட்டு சர்க்கரை /கருப்பட்டி /வெல்லம் - 3 தேக்கரண்டி
  6. ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை
  7. தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி
  8. நெய் - 2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. சர்க்கரை தேங்காய் துருவல் பாதாம் பருப்பு முந்திரி பருப்பு ஏலக்காய் பொடி சேர்த்து மிக்ஸியில் திரிக்கவும்
  2. லேசான அவலை களைந்து 5 நிமிடங்கள் வைக்கவும். கெட்டி அவலாக இருந்தால் அரைமணிநேரம் ஊறவைக்கவும்
  3. நவதானிய மாவு ஊறவைத்த அவல் மற்றும் திரித்தது சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும் தண்ணீர் தேவையில்லை
  4. கையில் எண்ணெய் தடவிக்கொண்டு இலையில் அல்லது பாலிதீன் கவரில் எண்ணெய் தடவி விட்டு வடைகளாக தட்டிக்கொள்ளவும் . அதில் ஸ்மைலி போன்று ஓட்டை பொட்டுக்கொள்ளவும்
  5. தோசைகல்லில் நெய் விட்டு டோஸ்ட் செய்து எடுக்கவும்
  6. சுவையான ஆரேக்கியமான அவல் மற்றும் நவதானிய ஸவீட் ஸ்மைலி தயார். வெளியே முறுமுறு என்றும் உள்ளே ஸாப்ட் ஆகவும் இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்