வீடு / சமையல் குறிப்பு / முருங்கை இலை/கீரை மற்றும் முருங்கைக்காய் சாதம்

Photo of Drumstick and drumstik leaves rice by Krishnasamy Vidya Valli at BetterButter
806
5
0.0(0)
0

முருங்கை இலை/கீரை மற்றும் முருங்கைக்காய் சாதம்

Nov-23-2017
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

முருங்கை இலை/கீரை மற்றும் முருங்கைக்காய் சாதம் செய்முறை பற்றி

மிகவு‌ம் ஆரேக்கியமான உணவு இது. செய்வது மிகமிக எளிது. அதிலும் குழந்தைகளுக்கு காரம் அதிகமில்லாத சத்தான சாதம் இது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பச்சரிசி - 1 கப்
  2. துவரம்பருப்பு/பாசிப்பருப்பு - 1 / 2 கப்
  3. முருங்கை இலை - 1 / 2 கப்
  4. முருங்கைக்காய் - 1
  5. பச்ச மிளகாய் - 1 அல்லது2
  6. தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி
  7. தாளிக்க நெய்/எண்ணெய் - 1 தேக்கரண்டி கடுகு - 1 / 2 தேக்கரண்டி உளுத்தம்பருப்பு - 1 / 2 தேக்கரண்டி மிளகாய் வத்தல் - 1 பெருங்காயம் - 1 சிட்டிகை கருவேப்பிலை - 2 ஆர்க்கு
  8. உப்பு - 1 / 2 தேக்கரண்டி
  9. விருப்பப்பட்டால் காரப்பொடி - 1 / 4 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. முருங்கை இலை தனியாக அலம்பி வைக்கவும். முருங்கைக்காய் ஒரு விரல் நீளத்திற்கு நறுக்கி வைக்கவும்
  2. குக்கரில் முருங்கை இலை பருப்பு அரிசி சேர்த்து நன்றாக வேகவிடவும்
  3. தனியாக முருங்கைக்காயை வேக வைக்கவும் . வெந்ததும் ஸ்பூனால் அதன் சதை பகுதியை தனியாக எடுக்கவும்
  4. தேங்காய் துருவலை பச்ச மிளகாய் சேர்த்து அரைக்கவும்
  5. கடாயில் நெய் / எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு கருவேப்பிலை பெருங்காயம் மிளகாய் வத்தல் தாளிக்கவும்
  6. வேகவைத்த சாதம் பருப்பு முருங்கை இலை தனியாக எடுத்த முருங்கைக்காயின் சதை பகுதி அரைத்த விழுது உப்பு விருப்பப்பட்டால் காரப்பொடி சேர்த்து நன்கு கிளறவும்
  7. ஆரேக்கியமான முருங்கைக்காய் மற்றும் முருங்கை இலை/கீரை சாதம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்