வீடு / சமையல் குறிப்பு / அப்பள சாதம்

Photo of Papad Rice by App Play at BetterButter
774
3
0.0(0)
0

அப்பள சாதம்

Nov-23-2017
App Play
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

அப்பள சாதம் செய்முறை பற்றி

அரிசி உணவுகள்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. 1 cup – ஏதாவது ஒரு சுண்டல்
  2. 1 cup – உதிராக வடித்த சாதம்
  3. 4 to 5 – சுட்ட அல்லது பொரித்த அப்பளங்கள்
  4. 2 – மோர் மிளகாய்
  5. ஒரு சிட்டிகை – பெருங்காயத்தூள்
  6. 1 tsp – நெய் மற்றும் நல்லெண்ணெய்
  7. சுவைக்கு வேண்டிய உப்பு

வழிமுறைகள்

  1. வேகவைத்த சுண்டலை தண்ணீர் இல்லாமல் வடிய வைக்கவும்.
  2. அப்பளங்களை காய்ச்சியோ, பொரித்தோ எடுத்துக் கொள்ளவும்.
  3. மோர் மிளகாய்களையும் பொரித்து வைக்கவும்.
  4. சாதத்தை ஒரு தட்டில் பரவலாகக் கொட்டி மேலே நெய்யைச் சேர்க்கவும்.
  5. அப்பளங்களையும் மிளகாய்களையும் மிக்சியில் சரியாக அரை நிமிடம் சுற்றிப் பொடிக்கவும். கையால் crush பண்ணாலும் சரிதான். பொடியாகாமல் பார்த்துக்கொள்ளவும்.
  6. இந்தப் பொடியை சாதத்தின் மேலே பரவலாகக் கொட்டிச் சேர்க்கவும்.
  7. ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு வடித்து வைத்த சுண்டலை ஈரம் போக பிரட்டிக் கொள்ளவும். தாளிப்பு எதுவும் தேவையில்லை, அல்லது விரும்பினால் செய்து கொள்ளலாம். பிரட்டின சுண்டலை சாதத்தில் சேர்க்கவும்.
  8. பெருங்காயம் மற்றும் உப்பை பரவலாகத் தூவவும். (சுண்டல், அப்பளம், மிளகாய் மூன்றிலும் உப்பு உள்ளதால் மிகவும் கவனமாக சேர்க்கணும்)
  9. கரண்டிக் காம்பால் சாதம் குழையாதபடி கிளறிவிட்டால் சுண்டல் அப்பள சாதம் தயார். லஞ்சுக்கும் ஏற்றது இந்த சாதம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்