வீடு / சமையல் குறிப்பு / மணத்தக்காளி சாதம்

Photo of Manathakkali sadam by Krishnasamy Vidya Valli at BetterButter
1533
3
0.0(0)
0

மணத்தக்காளி சாதம்

Nov-26-2017
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

மணத்தக்காளி சாதம் செய்முறை பற்றி

மணத்தக்காளி பச்சையாக பறித்து உப்பு சேர்த்து தயிரில் கலந்து வெயிலில் காய வைத்து எடுத்து வைத்துள்ளதை வைத்து செய்யும் சாதம் இது. இதை பச்ச மணத்தக்காளி வைத்தும் செய்யலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. சாப்பாடு அரிசி - 1 / 2 கப்
  2. மணத்தக்காளி(காயவைத்தது /பச்சை ) - 2 மேஜைகரண்டி
  3. தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி
  4. தாளிக்க கடுகு - 1 / 2 தேக்கரண்டி உளுத்தம்பருப்பு - 1 / 2 தேக்கரண்டி கருவேப்பிலை - 1 ஆர்க்கு
  5. தேங்காய் துருவல் - 1 தேக்கரண்டி
  6. கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
  7. மிளகு - 10
  8. மிளகாய் வத்தல் - 1
  9. கட்டி பெருங்காயம்- சிறியதுண்டு
  10. மஞ்சள் பொடி - 1 சிட்டிகை
  11. உப்பு - 1 / 4 தேக்கரண்டி
  12. புளி கரைசல் - 1 / 2 தேக்கரண்டி
  13. வெல்லம் - 1 சிறிய துண்டு

வழிமுறைகள்

  1. சாப்பாடு அரிசியை தேவையானஅளவு தண்ணீர் விட்டு வேகவிடவும்
  2. கடாயில் 1/2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு மிளகு மிளகாய் வத்தல் கட்டி பெருங்காயம் சேர்த்து நன்றாக வறுத்துக்கொள்ளவும்
  3. வறுத்ததை ஆறவிட்டு பின்னர் மிக்ஸியில்கரகரப்பாகதிரிக்கவும்
  4. அதே கடாயில் 1/2 தேக்கரண்டி எண்ணெய் கூடுதலாக விட்டு மணத்தக்காளியை வறுக்கவும் பச்சையாக இருந்தால் வதக்கவும்
  5. அதனுடன் திரித்த பொடி சேர்த்து கிளறவும்
  6. புளி கரைசல் உப்பு வெல்லம் மஞ்சள் பொடி சேர்த்து கொதிக்கவிடவும்
  7. நன்றாக சுருள கிளறவும்
  8. சாதம் சேர்த்து கிளறவும்
  9. மீதமுள்ள தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம்பருப்பு கருவேப்பிலை தேங்காய் துருவல் சேர்த்து தாளித்து சாதத்துடன் சேர்க்கவும் .
  10. அப்பளம்/வத்தல்/வடகத்துடன் பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்