வீடு / சமையல் குறிப்பு / நாட்டுக் கோழி பிரியானி

Photo of Country chicken biryani by Rabia Hamnah at BetterButter
341
4
0.0(0)
0

நாட்டுக் கோழி பிரியானி

Nov-28-2017
Rabia Hamnah
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

நாட்டுக் கோழி பிரியானி செய்முறை பற்றி

குழந்தைகள் விரும்பி உண்ணும் உணவு இது. நாட்டுக் கோழியில் எதிர்ப்பு சக்தி நிறைந்துள்ளது. பிராய்லர் கோழியை தவிர்த்து இதை சேர்த்து கொள்ளுங்கள். குழந்தைகளுக்கு நாட்டுக் கோழியை சூப்பு வைத்து கொடுத்தால் கால்களுக்கு பலம் கிடைக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. நாட்டுக்கோழி-1 1/2கி
  2. பாஸ்மதி அரிசி-1 கி
  3. நெய்-150
  4. எண்ணெய்-150
  5. இஞ்சி பூண்டு விழுது- 3 கரண்டி (குழி கரண்டி)
  6. கிராம்பு-5 ஏலம்-7 கருவா-2 நீள துண்டு
  7. பெரிய வெங்காயம் -1/2கி
  8. தக்காளி - 400கி
  9. ப.மிளகாய்-8
  10. தயிர்-400
  11. மிளகாய் தூள்-3 டேபிள் ஸ்பூன் + (காரத்திற்கேற்ப)
  12. மல்லி இலை-1/2 கட்டு
  13. புதினா -1 கட்டு
  14. எலுமிச்சை பழம்-1
  15. உப்பு- தேவைக்கு

வழிமுறைகள்

  1. முதலில் கோழியை சுத்தம் செய்து, கொஞ்சம் இஞ்சி புண்டு விழுது, உப்பு, 1 டேபிள் ஸ்புன் மிளகாய் தூள், 100 கிராம் தயிர் சேர்த்து 30 முதல் 1மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
  2. அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடேற்றவும். பின்பு நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து ஏலம் , கருவா, கிராம்பு இம்மூன்றையும் கொஞ்சம் இடித்து சேர்க்கவும்.
  3. பின்பு வெங்காயம் சேர்க்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். பச்சை வாசனை அடங்கியதும் தக்காளி மிளகாய் சேர்க்கவும். பாதி அளவு மல்லி, புதினா சேர்க்கவும்.
  4. பின்பு தயிர் சேர்க்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் ஊற வைத்த கோழியை சேர்க்கவும். பின்பு மிளகாய் பொடி சேர்க்கவும். உப்பு தேவைக்கு சேர்க்கவும்.
  5. அரிசியை 20 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும். கோழியை நன்கு வேக விடவும். 3/4 பதம் வெந்ததும் 1 கப் அரிசிக்கு 1 1/2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும் அரிசியை கலைந்து வடிகட்டி சேர்க்கவும்
  6. அரிசி 3/4 பதம் வெந்ததும் மிகக் குறைந்த தணலில் வைத்து மீதியுள்ள மல்லி, புதினா சேர்த்து, எலுமிச்சை சாறு சேர்த்து மூடி போட்டு மேலே வெயிட் ஏற்றி வைக்கவும். 15 நிமிடம் கழித்து அடுப்பை அனைத்து விடவும் . சூடாக பரிமாறவும். இதனுடன் சிக்கன் 65, தயிர் சம்பல், முட்டைசேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்