வீடு / சமையல் குறிப்பு / சம்பா அரிசி மாவு ரொட்டி & கொழுக்கட்டை

Photo of Samba rice flour roti & kozhukattai by Asiya Omar at BetterButter
1249
5
0.0(0)
0

சம்பா அரிசி மாவு ரொட்டி & கொழுக்கட்டை

Nov-28-2017
Asiya Omar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சம்பா அரிசி மாவு ரொட்டி & கொழுக்கட்டை செய்முறை பற்றி

சம்பா அரிசி என்றால் சிவப்பரிசி தான். அதனை மாவாக இடித்து,வறுத்து வைத்தால் ஒரு வருடம் வரை கெடாமல் இருக்கும.இதனை உபயோகித்து ரொட்டி,கொழுகட்டை,புட்டு செய்து அசத்தலாம் .

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ரொட்டி செய்ய -சம்பா அரிசி வறுத்த மாவு( தேங்காய் போட்டு) - 1 கப்
  2. விரும்பினால் தேங்காய்த்துருவல் - கால் கப்
  3. உப்பு,நெய் - தேவைக்கு
  4. கொழுக்கட்டை செய்ய :
  5. சம்பா அரிசி வறுத்த மாவு - 1 கப்
  6. வெங்காயம் நறுக்கியது - 2 மேஜைக்கரண்டி
  7. துருவிய தேங்காய் - 2 மேஜைக்கரண்டி
  8. பொடியாக நறுக்கிய மிளகாய் -1
  9. நறுக்கிய மல்லி,கருவேப்பிலை - தலா 1 மேஜைக்கரண்டி
  10. உப்பு - தேவைக்கு.

வழிமுறைகள்

  1. முதலில் ரொட்டி செய்ய கொதிக்கும் நீரை தேவைக்கு மாவில் கொட்டி சுவைக்கு உப்பு சேர்த்து ஊற விட்டு நன்கு கையால் குழைக்கவும்.
  2. குழைத்த ரொட்டியை சிறு உருண்டைகளாக பிரித்துக் கொள்ளவும்.பிரித்த உருண்டையில் இரண்டு எடுத்து நடுவில் நெய் தடவி ஒரு ஈரத்துணியை தட்டில் விரித்து அதன் மேல உருண்டைகளைச் சேர்த்து வைத்து கையால் வட்டமாக பரத்தி எடுத்து சூடான தோசைக் கலத்தில் போடவும். இருபுறமும் நன்கு வெந்தவுடன் ரொட்டியை எடுத்து சிறிது தண்ணீர் தெளித்து நெய் தடவி பரிமாறவும்.
  3. சூடான சம்பா அரிசி மாவு ரொட்டி தயார்.
  4. தேங்காய்ச்சட்னி, பிடித்த குழம்பு வகையுடன் பரிமாறலாம்
  5. கொழுக்கட்டை செய்ய மாவுடன் நறுக்கிய வெங்காயம்,மிளகாய்,மல்லி கருவேப்பிலை,தேங்காய்த் துருவல் ,உப்பு தேவைக்கு சிறிது தண்ணீர் சேர்த்து விரவி வைக்கவும். கொழுக்கட்டைகளாக பிடிக்கவும்.
  6. சிறிது ஊறியதும் இட்லி பாத்திரத்தில் வைத்து அவித்து எடுக்கவும்.
  7. சூடான சுவையான சத்தான சம்பா அரிசி மாவு ரொட்டி & கொழுக்கட்டை தயார். சட்னி,சாம்பார் அல்லது குழம்புடன் பரிமாறவும். காலை இரவு நேர டிபனாகப் பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்