மட்டார் புலாவ் அல்லது பட்டாணி புலாவ் | Matar Pulao or Peas Pulao in Tamil

எழுதியவர் Ruchira Hoon  |  23rd Jul 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Matar Pulao or Peas Pulao recipe in Tamil,மட்டார் புலாவ் அல்லது பட்டாணி புலாவ், Ruchira Hoon
மட்டார் புலாவ் அல்லது பட்டாணி புலாவ்Ruchira Hoon
 • ஆயத்த நேரம்

  0

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  45

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  6

  மக்கள்

898

0

மட்டார் புலாவ் அல்லது பட்டாணி புலாவ் recipe

மட்டார் புலாவ் அல்லது பட்டாணி புலாவ் தேவையான பொருட்கள் ( Ingredients to make Matar Pulao or Peas Pulao in Tamil )

 • 1 கப் நீளமான முழு அரிசி
 • 1 வெங்காயம் நறுக்கப்பட்டது
 • 1 தேக்கரண்டி சீரகம்
 • 1 பிரிஞ்சி இலை
 • 1 இரண்டு இன்ச் இலவங்கப்பட்டைத் துண்டு
 • 1/2 தேக்கரண்டி மிளகு
 • 1 கப் உறைந்த பட்டாணி
 • 2 கப் நல்ல தண்ணீர்
 • சுவைக்கேற்ற உப்பு
 • ஒரு சிட்டிகை மஞ்சள் தூள்
 • 1 தேக்கரண்டி நெய்

மட்டார் புலாவ் அல்லது பட்டாணி புலாவ் செய்வது எப்படி | How to make Matar Pulao or Peas Pulao in Tamil

 1. 1. அரிசியை நன்றாகக் கழுவி இரண்டு கப் நல்லத் தண்ணீரில் ஊறவைக்கவும். 20 நிமிடங்களுக்கு எடுத்து வைக்கவும்.
 2. 2. மூடி உள்ள ஒரு பெரிய சாஸ் பாத்திரத்தில் நெய் சேர்த்து நன்றாகச் சூடுபடுத்தவும்.
 3. 3. சீரகம், மிளகு, பிரிஞ்சு இலை, இலவங்கப்பட்டை சேர்த்து வெடிக்கும் வரைக் காத்திருக்கவும். அதன்பின் அதனுள் வெங்காயம் சேர்க்கவும்.
 4. 4. வெங்காயத்தைச் சற்றே பொன்னிறமாக வதக்கி அதனோடு பட்டாணி சேர்த்து, பட்டாணி மிருதுவாகும்வரை வறுக்கவும்.
 5. 5. உப்பு மஞ்சள் அவற்றுடன் சேர்த்து அரிசி முழுவதையும் தண்ணீரோடு சேர்க்கவும். மசாலா அனைத்தும் ஒன்றாகக் கலக்கும்வரை ஒரு முறை கலக்கவும்.
 6. 6. கேசை குறைத்து, அரிசி வேகும் வரை சிம்மில் வைக்கவும்.
 7. 7. உங்களுக்குப் பிடித்த குழம்போடு பரிமாறவும்.

எனது டிப்:

நாகரிகமானவர்களுக்கு பரிமாறினால் ஒரு சிட்டிகை குங்குமப்பூ சேர்க்கவும்.

Reviews for Matar Pulao or Peas Pulao in tamil (0)