வீடு / சமையல் குறிப்பு / நெல்லிக்காய் சாதம்

Photo of Gooseberry Rice by Sowmya Sundar at BetterButter
820
3
0.0(0)
0

நெல்லிக்காய் சாதம்

Dec-01-2017
Sowmya Sundar
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

நெல்லிக்காய் சாதம் செய்முறை பற்றி

நெல்லிக்காய் விட்டமின் சி நிறைந்தது.எப்போதும் எலுமிச்சை சாதம் செய்யாமல் மாறுதலாக இதை செய்யலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சாப்பாட்டு அரிசி- 2 கப்
  2. நெல்லிக்காய் - 10
  3. தேங்காய் துருவல்- 4 டேபிள் ஸ்பூன்
  4. பச்சை மிளகாய்- 6 முதல் 8 வ
  5. வேர்க்கடலை- 2 டேபிள் ஸ்பூன்
  6. மஞ்சள் தூள்- 1/4 டீஸ்பூன்
  7. கடுகு-1/2 டீ ஸ்பூன்
  8. உளுத்தம்பருப்பு- 1/2 டீஸ்பூன்
  9. கறிவேப்பிலை- சிறிது
  10. உப்பு
  11. பெருங்காயம்- 1/4 டீஸ்பூன்
  12. எண்ணெய்- 2 டேபிள் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. சாதத்தை ஒன்றுக்கு இரண்டு பங்கு தண்ணீர் விட்டு உதிராக வடித்து கொள்ள வேண்டும்
  2. நெல்லிக்காயை கொட்டையை எடுத்து விட்டு நறுக்கி கொள்ளவும்.
  3. மிக்சியில் நறுக்கிய நெல்லிக்காய்,பச்சை மிளகாய், தேங்காய் துருவல் சேர்த்து தண்ணீர் விடாமல் நறநறவென அரைத்து கொள்ளவும்
  4. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம்பருப்பு, வேர்க்கடலை, கறிவேப்பிலை தாளித்து உப்பு மஞ்சள் தூள் பெருங்காயம் சேர்த்து அரைத்த விழுது சேர்த்து சுமார் 5 நிமிடம் வதக்கவும்.
  5. வதங்கியதும் வடித்த சாதம் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்