Photo of Bakudu by fathoom hameed at BetterButter
246
3
0.0(0)
0

பக்குடு

Dec-09-2017
fathoom hameed
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பக்குடு செய்முறை பற்றி

ஏழுஇலை கிழங்கை வைத்து செய்யும் அற்புதமான உணவு.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. ஏழுஇலை கிழங்கு (மரவள்ளி கிழங்கு) 500 கிராம்
  2. உப்பு ( தேவையான அளவு)
  3. மஞ்சள் தூள் 2 மேஜைக்கரண்டி
  4. புளி ( எலுமிச்சை அளவு உருன்டை)
  5. தக்காளி 1
  6. பூண்டு 5 பல்
  7. எண்ணெய் 3 மேஜைக்கரண்டி
  8. கடுகு 1 மேஜைக்கரண்டி
  9. கருவேப்பிலை 2 இனுக்கு
  10. மல்லி இலை ( சறிதளவு)
  11. கீரை பொடி 3 தேக்கரண்டி (கீரை பொடி என்பது காய்ந்த மிளகாய், தனியா, சீரகம் சேர்த்து வறுத்து கொரகொரப்பாக அரைத்தது)

வழிமுறைகள்

  1. மரவள்ளி கிழங்கை தோல் நீக்கி தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேகவைக்க வேண்டும்.
  2. புளியை கரைத்து வடித்து அதனுடன் தக்காளியை பிசைந்துக்கொள்ளவும்.
  3. பூண்டை தோல் நீக்கி.தட்டிக்கொள்ளவும்
  4. அவித்த மரவள்ளி கிழங்குடன் புளி கரைச்சல், தட்டிய பூண்டு சேர்த்துக் கொள்ளவும்.
  5. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு, கருவேப்பிலை சேர்த்து தாளித்து மரவள்ளி கிழங்குடன் சேர்த்து கடைசியாக மல்லி இலை, கீரை பொடி சேர்த்து பரிமாரவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்