முழு கோதுமை பசலிக்கீரை பன்னீர் லிஃபாஃபா பரோட்டா | Whole Wheat Spinach Paneer Lifafa Paratha in Tamil

எழுதியவர் Jyothi Rajesh  |  22nd Jan 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Whole Wheat Spinach Paneer Lifafa Paratha by Jyothi Rajesh at BetterButter
முழு கோதுமை பசலிக்கீரை பன்னீர் லிஃபாஃபா பரோட்டாJyothi Rajesh
 • ஆயத்த நேரம்

  40

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  15

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  2

  மக்கள்

2371

0

முழு கோதுமை பசலிக்கீரை பன்னீர் லிஃபாஃபா பரோட்டா recipe

முழு கோதுமை பசலிக்கீரை பன்னீர் லிஃபாஃபா பரோட்டா தேவையான பொருட்கள் ( Ingredients to make Whole Wheat Spinach Paneer Lifafa Paratha in Tamil )

 • 2 கப் முழு கோதுமை மாவு
 • 1 கப் பால் அல்லது தேவையான அளவு
 • 1 தேக்கரண்டி நெய்
 • சுவைக்கேற்ற உப்பு
 • எண்ணெய்/நெய்/வெண்ணெய் பரோட்டாவை தயாரிப்பதற்கு
 • 1 தேக்கரண்டி சோள மாவு 1 தேக்கரண்டி தண்ணீரில் கலந்தது, முனைகளை மூடுவதற்காக
 • பூரணத்திற்காக:
 • 250 கிராம் பன்னீர்/காட்டேஜ் வெண்ணெய்
 • 1 மற்றும் 1/2 கப் பாலக்கீரை/பசலிக்கீரை, நெறுக்கமாக கட்டப்பட்டது
 • 1 தேக்கரண்டி சீரகம்
 • 1 தேக்கரண்டி வறுத்த சீரகத்தூள்
 • 1/2 தேக்கரண்டி சாட் மசாலா
 • 1 வெங்காயம்
 • 3 பச்சை மிளகாய்
 • சுவைக்கேற்ற உப்பு
 • 1 தேக்கரண்டி எண்ணெய்

முழு கோதுமை பசலிக்கீரை பன்னீர் லிஃபாஃபா பரோட்டா செய்வது எப்படி | How to make Whole Wheat Spinach Paneer Lifafa Paratha in Tamil

 1. ஒரு கலவை பாத்திரத்தில், விவாட்டா முழு கோதுமை மாவு, உப்பு, 1 தேக்கரண்டி உருக்கிய நெய் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்துகொள்ளவும். அடுத்து வெந்நீரைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து மாவாகப் பிசைந்துகொள்க.
 2. மென்மையான மாவாக வரும்வரை பிசையவும். (மென்மையான வடிவத்தைப் பெறவிரும்பினால், மாவைப் பிசைய பாலை மட்டும் பயன்படுத்தவும்). மூடியிட்டு 30 நிமிடங்கள் விடவும்.
 3. மாவு ரெஸ்டில் இருக்கும்போது, பூரணத்தை நாம் தயாரிக்கலாம். முடிந்தளவு பசலிக்கீரையைப் பரித்துக் கழுவிக்கொள்ளவும். பன்னீரைத துருவி எடுத்து மூடி வைத்துக்கொள்ளவும்.
 4. ஒரு கடாயில் எண்ணெயைச் சூடு படுத்திக்கொள்க. எண்ணெய் சூடானதும், சீரகம் சேர்த்து அவை சற்றே பொன்னிறமாகும்வரைக் காத்திருக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் மிருதுவாகும்வரை வதக்கவும்.
 5. அடுத்து, பொடியாக நறுக்கப்பட்ட பசலிக்கீரையைச் சேர்த்து பசலிக்கீரையின் ஈரம் போகும்வரை சமைக்கவும். சுவைக்கேற்ற உப்பு சேர்க்கவும். பசலிக்கீரை முற்றிலுமாக உலர்ந்துவிட்டால் அடுப்பை நிறுத்திவிட்டு ஆறவிடவும்.
 6. இப்போது வறுத்த சீரகத் தூள், சாட் மசாலா ஆகியவற்றை துருவிய பன்னீரில் சேர்க்கவும். வேகவைத்த பசலிக்கீரைக் கலவையைச் சேர்த்து அனைத்தையும் ஒன்றாகக் கலக்கவும். இந்தக் கலவை உலரக்கூடாது. அதில் நீர் இருப்பதைக் கண்டால் பிழிந்துவிடவும். சம அளவுள்ள உருண்டைகளாகப் பிரிக்கவும்.
 7. மீண்டும் மாவை பிசைந்துகொள்க. சமமான உருண்டைகளாகப் பிரித்துக்கொள்க (எலுமிச்சை அளவு), அவற்றை 10 இன்சுக்கு உருட்டிக்கொள்க. சூடான கிர்டில்/தவாவில் வைத்து 10 நொடிகள் இரண்டு பக்கங்களும் வேகும்வரை எண்ணெய் விடாமல் வேகவைக்கவும். அதன்பின்னர் தவாவிலிருந்து எடுத்து மீதமுள்ள மாவுக்கும் இப்படியே செய்யவும்.
 8. இப்போது அரைவேக்காட்டு ரொட்டி தட்டையான இடத்தில் வைத்து ஒரு பகுதி பசலிக்கீரை பன்னீர் பூரணத்தை மையத்தில் வைக்கவும். விளிம்புகளை விடுத்து மற்றப் பகுதியில் பூரணத்தைப் பரப்பவும்.
 9. ரொட்டியின் விளிம்புகளில் சோளமாவு சாந்தை தடவவும். ரொட்டியின் எதிர் முனைகளை பூரணத்தின் மீது மடிக்கவும். இப்போது மீதமுள்ள இரண்டு முனைகளையும் மடித்து நன்றாக ஒட்டவும். இது ஒரு மடித்த தபால் கடிதம் போல் இருக்கும்.
 10. சூடான தவாவின் மீது வைத்து எண்ணெய்/நெய் தெளித்து இரு பக்கங்களும் பொன்னிறமாகும்வரை வறுக்கவும்.
 11. கொஞ்சம் தயிர், ஊறுகாயுடன் உடனே பரிமாறவும்.

எனது டிப்:

மடிக்கும் முறை: பூரணத்தை மையத்தில் வைக்கவும். சோள மாவை விளிம்புகளெங்கும் தடவவும். முதலில் 2 எதிர் எதிர் பக்கங்களை பூரணத்தில் சேர்த்து மூடவும். இந்த மடிப்பில் பரோட்டாவின் கடைசி பகுதி ஒன்றோடு ஒன்று இருக்கும். அடுத்து மற்ற இரு முனைகளை மடிக்கவும். தயவுசெய்து மடிப்பது ஏற்கனவே மடிக்கப்பட்டதைத் தொடவோ ஒன்றின் மீது ஒன்று படியாமல் பார்த்துக்கொள்ளவும். பூரணம் மூடியிருக்கும்படி மடித்து மையப்பகுதியை நெறுக்கிக்கொள்ளவும்.

Reviews for Whole Wheat Spinach Paneer Lifafa Paratha in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.