வீடு / சமையல் குறிப்பு / பிளம்ஸ் பலூடா

Photo of Plums Falooda by Ayesha Ziana at BetterButter
395
3
0.0(0)
0

பிளம்ஸ் பலூடா

Dec-12-2017
Ayesha Ziana
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பிளம்ஸ் பலூடா செய்முறை பற்றி

பிளம்ஸ், நன்னாரி சர்பத் வைத்து செய்த வித்தியாசமான பலூடா.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • பாய்ளிங்
  • சில்லிங்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பிளம்ஸ் 8 மற்றும் அலங்கரிக்க
  2. நன்னாரி சர்பத் 4 ஸ்பூன் அல்லது தேவைக்கேற்ப
  3. சேமியா/பலூடா சேவ் ஒரு கையளவு
  4. காய்ச்சிய பால் 1/2 கப்
  5. சப்ஜா விதை 2 ஸ்பூன்(ஊற வைத்தது)
  6. பிளாக் கரண்ட் கோன் ஐஸ் க்ரீம் அலங்கரிக்க
  7. தண்ணீர் தேவைக்கு
  8. சீனி தேவைக்கு

வழிமுறைகள்

  1. 1 1/2 கப் தண்ணீரை கொதிக்க வைத்து சேமியாவை அதில் போட்டு வேக வத்து , வாடி கட்டவும்.
  2. உடனே பைப் தண்ணீரில் சேமியாவை அலசவும். மீண்டும் வடிகட்டவும். சேமியா ஒட்டாமல் இருக்க வேண்டி இது முக்கியமாக செய்ய வேண்டும்.
  3. பாலை ஏலக்காய் சேர்த்து காய்ச்சி, அதில் 2 ஸ்பூன் அல்லது தேவைக்கு சீனி சேர்த்து, 1/2 மணி நேரம் பிரிட்ஜில் வைக்கவும்.(வேண்டுமானால் பாலை சிறிது கெட்டியாக ஆகும் வரை காய்ச்சலாம்).
  4. சப்ஜா விதைகளை 3/4 கப் தண்ணீரில் அவை நன்றாக பெரிதாகும் வரை 15 நிமிடம் ஊற வைத்து வடிகட்டவும்.
  5. பிளம்ஸ் பழங்களைத் தோல் உரித்து, விதை நீக்கி நன்றாக மசித்து வைக்கவும். தேவைப்பட்டால் சிறிது சீனி சேர்க்கலாம்.
  6. லேயர் செய்ய: ஒரு பெரிய கிளாசில் முதலில் 1 டேபிள் ஸ்பூன் சப்ஜா விதை, பின்னர் பாதி அளவு சேமியா, பின்னர் 2 ஸ்பூன் நன்னாரி சர்பத், பின்னர் பாதி அளவு பிளம்ஸ் என அடுக்கவும். மீண்டும் ஒரு முறை இதே போல் செய்யவும்.
  7. அடுத்தது, பாலைக் கவனமாக ஊற்றவும். பின்னர், ஒரு ஸ்கூப் ஐஸ் க்ரீம் சேர்த்து, அதன் மேல் பிளம்ஸ், மற்றும் ஐஸ் க்ரீமில் உள்ள கோன் வாபில்ஸ் சேர்த்து அல்ங்கரிக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்