Photo of Pasta Rockcandy Payasam by Sowmya Sundar at BetterButter
441
4
0.0(1)
0

Pasta Rockcandy Payasam

Dec-13-2017
Sowmya Sundar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

Pasta Rockcandy Payasam செய்முறை பற்றி

வரும் விருந்தினர்களை வாவ் என சொல்ல வைக்கும் இந்த வித்தியாசமான பாயசம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்டி பார்ட்டிஸ்
  • ஃப்யூஷன்
  • பாய்ளிங்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பாஸ்தா- 1/2 கப்
  2. தண்ணீர்- 3/4 கப்
  3. பால் - 2 கப்
  4. கல்கண்டு (பொடித்து) - 1/2 கப்
  5. ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்
  6. குங்கும பூ- சிறிது
  7. முந்திரி பருப்பு - 6
  8. நெய்- 1 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் பாஸ்தா மற்றும் 3/4 கப் தண்ணீர் ஊற்றி சுமார் 5 நிமிடம் வேக விடவும்.
  2. பின்னர் அதிலேயே பாலை ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.
  3. பாஸ்தா குழைய வெந்து பாலும் குறுகும் வரை அடுப்பை குறைந்த தீயில் வைத்து கொதிக்க விடவும்.
  4. பின்னர் குங்கும பூ மற்றும் ஏலக்காய் சேர்த்து 5 நிமிடம் வரை கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து கல்கண்டு பொடியை சேர்த்து நன்கு கலந்து இறக்கவும்.
  5. ஒரு கடாயில் நெய் விட்டு முந்திரி பருப்பை வறுத்து பாயசத்தில் சேர்த்து பரிமாறவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Subhashni Venkatesh
Jan-31-2018
Subhashni Venkatesh   Jan-31-2018

very different

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்