ஜிங்கா பிரியாணி/இறால்(கள்) பிரியாணி | Jinga Biryani/Prawn(s) Biryani in Tamil

எழுதியவர் Lubna Karim  |  26th Jan 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Jinga Biryani/Prawn(s) Biryani by Lubna Karim at BetterButter
ஜிங்கா பிரியாணி/இறால்(கள்) பிரியாணிLubna Karim
 • ஆயத்த நேரம்

  25

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  50

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  2

  மக்கள்

806

0

ஜிங்கா பிரியாணி/இறால்(கள்) பிரியாணி recipe

ஜிங்கா பிரியாணி/இறால்(கள்) பிரியாணி தேவையான பொருட்கள் ( Ingredients to make Jinga Biryani/Prawn(s) Biryani in Tamil )

 • 2 கப் பாஸ்மதி அரிசி
 • ½ கிலோ இறால், பிரிக்கப்பட்டது.
 • கடல் உப்புத் தடவி கழுவப்பட்ட*
 • 1 பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கப்பட்டது
 • 1/2 தேக்கரண்டி இஞ்சிப்பூண்டு விழுது
 • 3 தேக்கரண்டி தயிர்
 • 2 தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த் தூள்
 • ½ தேக்கரண்டி மஞ்சள் தூள்
 • 1 தேக்கரண்டி கரம் மசாலா **
 • 3-4 ஏலக்காய்
 • 5-6 கிராம்பு
 • 1 2' இன்ச் இலவங்கப்பட்டை குச்சிகள்
 • 1 நட்சத்திர சோம்பு
 • 3 தேக்கரண்டி புதிய எலுமிச்சை சாறு
 • கையளவு புதிய கொத்துமல்லி, நறுக்கப்பட்டது
 • கையளவு புதிய புதினா இலை
 • 2 தேக்கரண்டி வெதுவெதுப்பான பால்
 • ½ தேக்கரண்டி குங்குமப்பூ
 • ½ கப் நெய்/ அடித்துவைத்துள்ள வெண்ணெய்
 • உப்பு, சுவைக்கேற்ற அளவு

ஜிங்கா பிரியாணி/இறால்(கள்) பிரியாணி செய்வது எப்படி | How to make Jinga Biryani/Prawn(s) Biryani in Tamil

 1. மேரினேட் செய்வ: ஒரு பாத்திரத்தில் இறால், உப்பு*, சிவப்பு மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், இஞ்சிப்பூண்டு விழுது, ஒரு சிட்டிகை கரம் மசாலா, தயிர் ஆகியவற்றைக் கலந்துகொள்ளவும். கொஞ்சம் கொத்துமல்லி, புதினா இலைகள் சேர்த்துக்கொள்ளவும்.
 2. நன்றாகக் கலந்து குறைந்தது ஒரு மணி நேரமாவது பிரிஜ்ஜில் வைக்கவும்.
 3. இதற்கிடையில்:
 4. இதற்கிடையில், பாஸ்மதி அரிசியைக் கழுவி ஊறவைக்கவும். ஒரு சிறிய பாத்திரத்தில் வெதுவெதுப்பான பாலையும் குங்குமப்பூவையும் கலந்து எடுத்து வைக்கவும்.
 5. ஒரு கனமான அடிப்பாகமுள்ள சமையல் பாத்திரத்தில் அல்லது கடாயில் நெய் சேர்த்து அவற்றோடு 2 ஏலக்காய், 3 கிராம்பு, 1 இன்ச் இலவங்கப்பட்டையைச் சேர்க்கவும்.
 6. மசாலாக்களில் இருந்து வாசனை வெளியேறட்டும். இவற்றோடு நறுக்கப்பட்ட வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும். வெங்காயம் மொறுமொறுப்பாக நல்ல பொன்னிறமாக மாறியதும் அடுப்பை நிறுத்திவிட்டு, வெங்காயத்தையும் நெய்யையும் தனித்தனியே வடிக்கட்டிவிடவும்.
 7. இறாலைச் சமைத்தல்:
 8. அதே பாத்திரத்தில் அல்லது கடாயில், மேரினேட் செய்த இறால், 1 தேக்கரண்டி நெய், 1 தேக்கரண்டி வறுத்த வெங்காயத்தைச் சேர்க்கவும். ஒட்டுமொத்தத் தண்ணீரும் ஆவியாக வெளியேறி இறால் மிருதுவாக மாறும்வரை வரை மூடியிட்டு வேகவைத்து, எடுத்து வைக்கவும்.
 9. சாதம் வடிப்பது:
 10. ஒரு கனமான அடிப்பாகமுள்ள பாத்திரத்தில் (அரிசி வடிக்கப் பயன்படுத்துவது) 10-12 கப் தண்ணீர் (அதிக என்றாலும் பிரச்சினையில்லை, தண்ணீரை நாம் வடிக்கட்டிவிடுவதால்), உப்பு*, இஞ்சிப்பூண்டு விழுது, 3 ஏலக்காய், 3 கிராம்பு மற்றும் 2 இலவங்கப்பட்டைக் குச்சிகளைச் சேர்க்கவும்.
 11. தண்ணீரைக் கொதிக்கவிடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், ஊறவைத்த பாஸ்மதி அரிசியைச் சேர்த்து வேகும்வரைக்கும் வேகவைக்கவும்.
 12. ஒரு சமையல் பாத்திரத்தில் சல்லடையைப் பயன்படுத்தி வடிக்கட்டி சேகரித்துக்கொள்ளவும். நன்றாக வடிக்கட்டி எடுத்து வைக்கவும்.
 13. பிரியாணியில் அடுக்குகளை ஏற்படுத்துதல்:
 14. இப்போது ஒரு கனமான அடிப்பாகமுள்ள சமையல் பாத்திரத்தில் கொஞ்சம் நெய் சேர்த்து (வெங்காயத்தை வறுக்கப் பயன்படுத்தியது) அவற்றோடு வேகவைத்த பாஸ்மதி அரிசியில் பாதியைச் சேர்க்கவும்.
 15. இவற்றோடு வேகவைத்த இறால், நெய், கரம் மசாலா, குங்குமப்பூ (வெதுவெதுப்பான பாலில் ஊறவைத்தது), வறுத்த வெங்காயம், 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, புதிய கொத்துமல்லி, புதினா இலைகள்.
 16. இன்னொரு அடுக்கு பாஸ்மதி அரிசியால் மூடவும். உங்கள் வேகவைத்த இறால் அதிகமாக இருந்தால் அரிசியின் மீடு ஒரு அடுக்கு வைக்கவும். இப்படியாக செய்துகொள்ளவும்.
 17. இப்போது மீதமுள்ள நெய், குங்குமப்பூ, வறுத்த வெங்காயம், கரம் மசாலா, 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, புதிய கொத்துமல்லி, புதினா இலைகள் சேர்க்கவும். சிறு தீயில் மூடியிட்டு மூடி வடிக்கட்டியத் தண்ணீரை மூடிக்கு மேல் வைத்து வேகவைக்கவும்.
 18. கிட்டத்தட்ட 15-20 நிமிடங்கள் வேகவைக்கவும். அடுப்பை நிறுத்திவிட்டு பாத்திரத்தை அடுப்பிலேயே மேலும் ஒரு அரை மணி நேரம் வைக்கவும்.
 19. புதிய கொத்துமல்லி, புதினா இலைகளால் அலங்கரிக்கவும். டால்ச்சா மற்றும் தாய்கி சட்னியோடு சூடாகப் பரிமாறவும்.

எனது டிப்:

* இறாலில் உப்பு தடவுவதால் மேரினேட் செய்யும் போதும் அரிசியிலும் உப்பை சரிசெய்துகொள்ளவும். ** அரைத்த 6 ஏலக்காய், 6 கிராம்பு, 2 இன்ச் இலவங்கப்பட்டையை பொடியாக அரைத்துக்கொள்ளவும். தேவையான அளவு பயன்படுத்தி மீதத்தை ஒரு சிப்லாக் பையில் அல்லது காற்றுப்புகாத பாத்தித்தில் சேமித்து வைக்கவும்.

Reviews for Jinga Biryani/Prawn(s) Biryani in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.