எளிதான காரசாரமான புலாவ்/ அரிசி-காய்கறி(கள்) புலாவ் | Easy Breezy Tarkari Pulao/ Rice-Vegetable(s) Pilaf in Tamil

எழுதியவர் Lubna Karim  |  26th Jan 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Easy Breezy Tarkari Pulao/ Rice-Vegetable(s) Pilaf by Lubna Karim at BetterButter
எளிதான காரசாரமான புலாவ்/ அரிசி-காய்கறி(கள்) புலாவ்Lubna Karim
 • ஆயத்த நேரம்

  20

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  45

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  2

  மக்கள்

903

0

எளிதான காரசாரமான புலாவ்/ அரிசி-காய்கறி(கள்) புலாவ் recipe

எளிதான காரசாரமான புலாவ்/ அரிசி-காய்கறி(கள்) புலாவ் தேவையான பொருட்கள் ( Ingredients to make Easy Breezy Tarkari Pulao/ Rice-Vegetable(s) Pilaf in Tamil )

 • 1 கப் காய்கறி கலவை, நறுக்கியது
 • 1 கப் கேரட், உருளைக்கிழங்கு, குடமிளகாய், பிரெஞ்ச் பீன்ஸ், பட்டாளி, இனிப்பு சோளம் கலவை
 • 2 கப் அரிசி கழுவி 5 நிமிடங்கள் ஊறவைத்தது
 • 1 வெங்காயம், நறுக்கியது
 • 2 நடுத்தர அளவு தக்காளி, நறுக்கியது
 • 2 பச்சை மிளகாய் நீளவாக்கில் பிளந்தது
 • 1 தேக்கரண்டி இஞ்சி-பூண்டு விழுது
 • 1 பிரிஞ்சி இலை
 • 2 ஏலக்காய்
 • 1 இன்ச் துண்டு இலவங்கப்பட்டை
 • 2 கிராம்பு
 • 2 தேக்கரண்டி எவரெஸ்ட் ஷாஹி பிரியாணி மசாலா
 • 2 தேக்கரண்டி வெதுவெதுப்பான பால்
 • ஒரு சிட்டிகை குங்குமப்பூ
 • சுவைக்கேற்ற உப்பு
 • எண்ணெய்/நெய்
 • 3 தேக்கரண்டி புதிய கொத்துமல்லி, அரைத்தது
 • 2 தேக்கரண்டி புதினா அரைத்தது

எளிதான காரசாரமான புலாவ்/ அரிசி-காய்கறி(கள்) புலாவ் செய்வது எப்படி | How to make Easy Breezy Tarkari Pulao/ Rice-Vegetable(s) Pilaf in Tamil

 1. குங்குமப்பூவை வெதுவெதுப்பான பாலில் ஊறவைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
 2. ஒரு கனமான அடிப்பாக சமையல் பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானதும் பிரிஞ்சி இலை, ஏலக்காய், இலவங்கப்பட்டை, கிராம்பு சேர்க்கவும். நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பளபளப்பாக வறுத்துக்கொள்ளவும். இப்போது இஞ்சிப்பூண்டு விழுது சேர்த்து 1 நிமிடம் வறுக்கவும்.
 3. அதன்பின் நறுக்கியக் காய்கறிக்கலவையைச்சேர்த்து 2-3 நிமிடங்கள் அல்லது காய்கறிகளின் பச்சை வாடை மறையும் வரை வேகவைக்கவும். இப்போது நறு்ககிய வெங்காயத்தையும் பச்சை மிளகாயையும் சேர்த்து தக்காளி மிருதுவாகும்வரை வதக்கவும்.
 4. அடுத்து ஷாஹி பிரியாணி மசாலாவை காய்கறிகளோடு சேர்த்து மெதுவாகக் கிளரவும். அதன்பின் ஊறவைத்த அரிசி, உப்பு சேர்த்து மெதுவாகக் கிளரவும்.
 5. தண்ணீர் சேர்த்து அரிசியை அரைவேக்காடு வேகவைக்கவும். இப்போது ஊறவைத்த குங்குமப்பூ தாள்களோடு அரைத்த கொத்துமல்லி புதினா இலைகளைச் சேர்க்கவும்.
 6. மேலும் ஒரு கலக்கு கலக்கி ஒரு கனமான எடையை மேல் பகுதியில் வைத்து மூடி சிறு தீயில் அரிசி முழுமையாக வேகும்வரை வேகவைக்கவும்.
 7. தால்ச்சா, தஹி கி சட்னி, (வெங்காய ரைத்தா) அப்பளத்தோடு சூடாகப் பரிமாறவும்.

Reviews for Easy Breezy Tarkari Pulao/ Rice-Vegetable(s) Pilaf in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.

ஒரே மாதிரியான ரெசிப்பிஸ்