வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் ஷவர்மா

Photo of Chicken shawarma by Yasmin Shabira at BetterButter
481
3
0.0(0)
0

சிக்கன் ஷவர்மா

Dec-16-2017
Yasmin Shabira
150 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் ஷவர்மா செய்முறை பற்றி

பார்ட்டிக்கு ஏற்ற அரேபியன் சிக்கன் ஷவர்மா

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மைதா : 2 கப் ( 2கப்பிற்கு 5-6 ஷவர்மா ப்ரெட் வரும்)
  2. ஜீனி : 1 தேக்கரண்டி
  3. உப்பு : 1 தேக்கரண்டி
  4. பேக்கிங் பவுடர் : 1 தேக்கரண்டி
  5. பேக்கிங் சோடா : 1/2 தேக்கரண்டி
  6. ஆக்டிவ் ட்ரை ஈஸ்ட் : 1 மேசை கரண்டி
  7. வெதுவெதுப்பான தண்ணீர்: 1கப்
  8. எண்ணெய் : 2 மேசைக்கரண்டி
  9. ஸ்டஃப்பிங் செய்ய தேவையானவை:
  10. சிக்கன் : 250 கிராம்
  11. இஞ்சி பூண்டு விழுது : 1 மேசைக்கரண்டி
  12. மிளகாய் தூள் : 1 தேக்கரண்டி
  13. மிளகு தூள் : 1 தேக்கரண்டி
  14. கரம் மசாலா : 1 தேக்கரண்டி
  15. மஞ்சள் தூள் : 1/2 தேக்கரண்டி
  16. எலுமிச்சை : பாதி
  17. மயோனைஸ் : 4 மேசைக்கரண்டி
  18. தக்காளி கெட்ச்சப் : 1 மேசைக்கரண்டி
  19. மிளகு தூள் : 1/2 தேக்கரண்டி
  20. தக்காளி : 1/4 கப்
  21. வெங்காயம் : 1/2 கப்
  22. கேரட் மற்றும் முட்டை கோஸ் : 1/2 கப்
  23. ஆலிவ் எண்ணெய் : 1 மேசைக்கரண்டி

வழிமுறைகள்

  1. 1/2 கப் கை பொருக்கும் அளவுக்கு வெதுவெதுப்பான தண்ணீரில் ஈஸ்ட் உப்பு மற்றும் ஜீனி சேர்த்து 5-6 நிமிடம் ஈஸ்ட் ஆக்டிவேட் ஆகும் வரை வைக்கவும்...
  2. மைதா மாவில் பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா எண்ணெய் முட்டை மற்றும் ஈஸ்ட் சேர்த்து நன்கு பிசையவும்...
  3. தேவையெனில் மேலும் சிறிது வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து மிருதுவாக பிசைந்து கொள்ளவும்...
  4. மாவின் மேல் எண்ணெய் தடவி 2 மணி நேரம் மூடி வைக்கவும்...
  5. இரண்டு மணி நேரம் கழித்து மாவு நன்றாக உப்பி இருக்கும்... மேலும் 2 நிமிடங்களுக்கு மாவை நன்றாக பிசையவும்...
  6. சப்பாத்தி போல் விரித்து கொள்ள வேண்டும்...
  7. பின்னர் அதை தவாவில் போட்டு சப்பாத்தி போல் சுடவும்...
  8. ஸ்டஃப்பிங் செய்முறை::
  9. 250 கிராம் எலும்பு இல்லாத சிக்கனை சிறு சிறு துண்டுகளாக வெட்டி இஞ்சி பூண்டு விழுது, உப்பு , மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, மிளகு தூள், லெமன் ஜூஸ் சேர்த்து நன்றாக கலந்து ஃப்ரை செய்யவும்...
  10. நன்றாக ஃப்ரை செய்த சிக்கனை மிக்ஸியில் விப் மோடில் 2 - 3 சுற்று சுற்றி உதிர்த்து கொள்ளவும்...
  11. ஒரு பௌலில் பொடியாக அரிந்த வெங்காயம் ,தக்காளி , கேரட், முட்டைகோஸ், மயோனைஸ், தக்காளி கெட்சப், பெப்பர் மற்றும் ஆலிவ் ஆயில் ஆகியவற்றை நன்றாக கலந்து கொள்ளவும்.
  12. இவற்றுடன் உதிர்த்த சிக்கனையும் சேர்த்து கலந்து கொள்ளவும்...
  13. ஷவர்மா ப்ரெட்டில் சிறிது மயொனைஸ் மற்றும் கெட்சப் தடவி அதில் சிக்கன் கலவையை வைத்து ரோல் செய்யவும்....
  14. அவ்வளவு தான் மிக மிக சுவையான சிக்கன் ஷவர்மா ரெடி!!!!
  15. உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் விருந்தினருக்கும் செய்து கொடுத்து அனைவரின் பாராட்டுகளையும் அள்ளுங்க!!!

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்