வீடு / சமையல் குறிப்பு / மலபார் முட்டை மசாலா

Photo of Malabar egg curry by Subashini Krish at BetterButter
45
2
0.0(0)
0

மலபார் முட்டை மசாலா

Dec-17-2017
Subashini Krish
45 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

மலபார் முட்டை மசாலா செய்முறை பற்றி

மலபார் முட்டை மசாலா கேரளாவில் மிகவும் பிரபலமான உணவாகும். இது இடியாப்பம், ஆப்பம், தோசை, பரோட்டா என எந்தவித உணவிற்கும் சுவை கூட்டும்.

செய்முறை டாக்ஸ்

 • நான் வெஜ்
 • ஈஸி
 • டின்னெர் பார்ட்டி
 • கேரளா
 • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

 1. வேக வைத்த முட்டை 6
 2. பெரிய வெங்காயம் 2 பொடியாக நறுக்கியது
 3. பெங்களூர் தக்காளி 2 பொடியாக நறுக்கியது
 4. இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்
 5. பச்சை மிளகாய் 2
 6. காஷ்மீர் மிளகாய் தூள் 1 ஸ்பூன்
 7. கொத்தமல்லி தூள் 2 ஸ்பூன்
 8. சீரகத் தூள் 1 ஸ்பூன்
 9. மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
 10. கரம் மசாலா தூள் 1/2 ஸ்பூன்
 11. தேங்காய் பால் 1 cup
 12. உப்பு தேவையான அளவு
 13. தேங்காய் எண்ணெய் 30 மில்லி
 14. கடுகு 1/2 ஸ்பூன்
 15. கறிவேப்பிலை, கொத்தமல்லி அலங்கரிக்க

வழிமுறைகள்

 1. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
 2. பின்னர் பச்சை மிளகாய், தக்காளி,இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
 3. பின்னர் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கொத்தமல்லி தூள், சீரகத்தூள் சேர்த்து எண்ணெய் தெளியும் வரை குறைந்த தீயில் வதக்கவும்
 4. தேங்காய் பால் சேர்த்து கிளறவும்
 5. வேக வைத்த முட்டைகளை கீறி குழம்பில் சேர்க்கவும்.
 6. ஒரு கொதி வந்தவுடன் கரம் மசாலா தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து முட்டை உடையாமல் கிளறி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்