வீடு / சமையல் குறிப்பு / மினி ரவா இட்லி & கார சட்னி

Photo of Mini Rava idly with spicy chutney by Subashini Krish at BetterButter
539
2
0.0(0)
0

மினி ரவா இட்லி & கார சட்னி

Dec-17-2017
Subashini Krish
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

மினி ரவா இட்லி & கார சட்னி செய்முறை பற்றி

பார்ட்டிகளின் போது நிறைய உணவுகள் இருப்பதால் இந்த மினி ரவா இட்லிகள் சுவைத்து பார்க்கும் அளவில் அனைவரும் விரும்புவதாக இருக்கும் . இந்த காரசாரமான சட்னியும் இதற்கு ஏற்ற ஜோடி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • கர்நாடகா
  • ஸ்டீமிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. வெள்ளை ரவை 1/2 கிலோ
  2. தயிர் 1 லிட்டர்
  3. கடுகு 1 ஸ்பூன்
  4. இஞ்சி 1 அங்குலம்
  5. உடைத்த முந்திரி 50 கிராம்
  6. பச்சை மிளகாய் 3
  7. கறிவேப்பிலை 1 கைப்பிடி
  8. சீரகம் 1 ஸ்பூன்
  9. புரூட் சால்ட் 1 ஸ்பூன்
  10. கொத்தமல்லி தழை அலங்கரிக்க
  11. கேரட் துருவியது அலங்கரிக்க
  12. உப்பு தேவையான அளவு
  13. பெரிய வெங்காயம் 2
  14. தக்காளி 4
  15. வரமிளகாய் 10
  16. பூண்டு 10
  17. பெருங்காயம் 1/4 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து சீரகம்,முந்திரி பருப்பு சேர்த்து வதக்கவும்
  2. பொடியாக நறுக்கிய இஞ்சி,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  3. அதில் ரவையை கொட்டி சிவந்து விடாமல் கிளறி ஆறவைக்கவும்.
  4. தயிரை நன்கு கடைந்து உப்பு,ஆறிய ரவை கலவையை சேர்த்து கலக்கவும்
  5. அரைமணி நேரம் ஊற வைக்கவும்
  6. பெரிய வெங்காயம், தக்காளி, பூண்டு வரமிளகாய் ,உப்பு சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்
  7. ஒரு அடிகனமான கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, பெருங்காயம் தாளித்து அரைத்ததை ஊற்றி எண்ணெய் தெளியும் வரை கொதிக்க விடவும். சட்னி தயார்
  8. ஊறிய ரவை கலவையில் புரூட் சால்ட் சேர்த்து இட்லி பதத்திற்கு கரைக்கவும்.
  9. உடனடியாக மினி இட்லி தட்டுகளில் ஊற்றி வேக வைத்து எடுத்து கொத்தமல்லி தழை ,கேரட் தூவி அலங்கரிக்கவும்
  10. மினி ரவா இட்லிகளை கார சட்னியுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்