வீடு / சமையல் குறிப்பு / மீன் கட்லட்

Photo of Fish Cutlet by Rabia Hamnah at BetterButter
442
1
0.0(0)
0

மீன் கட்லட்

Dec-19-2017
Rabia Hamnah
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
7 மக்கள்
பரிமாறவும்

மீன் கட்லட் செய்முறை பற்றி

மீனைக் கொண்டு செய்யும் சுவவையான பார்ட்டி ஸ்நாக்ஸ்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • டின்னெர் பார்ட்டி
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 7

  1. மீன் (முள் இல்லாத வஞ்சிரம் மீன்)- 400 கிராம்
  2. உருளைக்கிழங்கு - 3
  3. வெங்காயம் - 3
  4. பச்சைமிளகாய் - 5
  5. சீரகத்தூள், மிளகுத்தூள், மிளகாய்தூள் - தலா1/2 ஸ்பூன் ,
  6. இஞ்சி,பூண்டு விழுது - 1/4 ஸ்பூன்
  7. கொத்தமல்லி, புதினா - 1 தேவையான அளவு
  8. ரஸ்க் - 4 (தேவைக்கு ஏற்ப) -
  9. முட்டை - 2 (தேவைக்கு ஏற்ப
  10. எலுமிச்சை சாறு - 1/2 ஸ்பூன் ,
  11. எண்ணெய் - தேவையான அளவு
  12. உப்பு,- தேவையான அளவ

வழிமுறைகள்

  1. முதலில் மீன், உருளைக்கிழங்கு இரண்டையும் ஆவியில் வேகவைத்து மசித்து வைத்துக் கொள்ளவும்.
  2. இதன் பின்பு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, கொத்தமல்லி, புதினா இலை ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு வதக்கவும்.
  3. இதனை மீன் கலவையில் சேர்த்து நன்கு கிளற வேண்டும். இந்த கலவையில் மிளகாய்த்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், எலுமிச்சை சாறு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
  4. முட்டையின் வெள்ளை கருவை மட்டும் தனியாக எடுத்து அகன்ற பாத்திரத்தை உடைத்து நன்கு அடித்து வைத்துக் கொள்ளவும்.
  5. வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, மீன் கலவையை சின்ன சின்ன உருண்டைகளாக தட்டி முட்டையில் பிரட்டி பின், ரஸ்க் தூளில் புரட்டி எடுத்து பொரித்தால் சுவையான மீன் கட்லெட் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்