வீடு / சமையல் குறிப்பு / ஸ்டப்ட் மஷ்ரூம்

Photo of Stuffed mushroom by Margaret Charles at BetterButter
276
2
0.0(0)
0

ஸ்டப்ட் மஷ்ரூம்

Dec-19-2017
Margaret Charles
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

ஸ்டப்ட் மஷ்ரூம் செய்முறை பற்றி

கிழக்கும் மேற்கும் கலந்து புதிய பரிமாண உணவு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் பர்த்டே
  • ஆஸ்திரேலியன்
  • பேக்கிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. மஷ்ரூம் 100 கி
  2. சிக்கன் சாசேஜ் 2 துண்டுகள்
  3. சீஸ் 2 மே க துருவியது
  4. பூண்டு 3 பல்
  5. மஞ்சள் பொடி 1/2 தே க
  6. மிளகு பொடி 1 தே க
  7. உப்பு தேவைக்கேற்ப
  8. எண்ணெய் தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. மஷ்ரூமை நன்ற சுத்தம் செய்து காம்பை கிள்ளி வைக்கவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, அதில் நறுக்கிய பூண்டை சேர்த்து வதக்கவும்
  3. பின்னர் மஷ்ரூம் காம்பை சிறிதாக நறுக்கி சேர்த்து வதக்கவும்
  4. இதில் உப்பு மிளகுத்தூள் மஞ்சள் பொடி சேர்த்து வதக்கவும்
  5. நன்றாக வதங்கியதும் அதில் துருவிய சீஸ் சேர்த்து வதக்கவும்.
  6. நன்கு சேர்ந்து வரும் போது அடுப்பை அணைத்து விடவும்
  7. சாசேஜை வட்ட வடிவில் மெலிதாக வெட்டி வைக்கவும்.
  8. காளான் குடைக்குள் ஒரு துண்டு சாசேஜ் வைத்து, செய்து வைத்த கலவை வைத்து மூடவும். எல்லா காளான் குடைகளையும் அவ்வாறு நிரப்பவும்.
  9. ஒரு பேன் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, காளானை இரு புறமும் வறுத்து எடுக்கவும். அல்லது ஓவனில் வைத்து 180℃ இல் 10 நிமிடம் பேக் செய்யவும்.
  10. மாறாக ஸ்கேயூரில் வைத்து க்ரில் செய்தும் எடுக்கலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்