வீடு / சமையல் குறிப்பு / வெஜிடபிள் முட்டை ஆம்லெட் மசாலா

Photo of Veggie Egg omlet roll masala by saranya sathish at BetterButter
331
5
0.0(0)
0

வெஜிடபிள் முட்டை ஆம்லெட் மசாலா

Dec-23-2017
saranya sathish
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வெஜிடபிள் முட்டை ஆம்லெட் மசாலா செய்முறை பற்றி

காய், முட்டை சேர்த்து செய்த சத்தான ஆம்லெட் பயன்படுத்தி செய்த மசாலா. சாதம், சப்பாத்தி, தோசைக்கு ஏற்றது.

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. முட்டை - 3
  2. துருவிய கேரட் - 2
  3. நறுக்கிய வெங்காயம் - 3
  4. பச்சை மிளகாய் - 3
  5. தக்காளி - 2 (அரைத்து வைக்கவும்)
  6. இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
  7. சீரகம் - 1 ஸ்பூன்
  8. உப்பு - சுவைக்கு
  9. எண்ணெய் - தேவையான அளவு
  10. கருவேப்பிலை, கொத்தமல்லி இலை
  11. மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
  12. மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
  13. சீரகம் தூள் - 1 ஸ்பூன்
  14. கரம் மசாலா - 1 ஸ்பூன்
  15. தக்காளி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
  16. முந்திரி - 4 (விழுதாக அரைக்கவும்)

வழிமுறைகள்

  1. பாத்திரத்தில் மூட்டையை உடைத்து ஊற்றவும். அதில் துருவிய கேரட் சிறிது வெங்காயம் உப்பு மிளகாய் தூள் சேர்த்து கலக்கவும்.
  2. தவாவை சூடு செய்து முட்டை கலவையை ஆம்லெட்டாக ஊற்றவும்.
  3. ஒருபுறம் வெந்ததும் ஆம்லெட்டை ரோலாக உருட்டவும்.
  4. 5 நிமிடம் வேக வைத்து பின் ஒரு தட்டிற்கு மாற்றவும்.
  5. சூடு ஆறியதும் சிறிய துண்டுகளாக்கவும்.
  6. கடாயில் எண்ணெய் ஊற்றவும். பின் சீரகம் சேர்க்கவும்.
  7. பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  8. மஞ்சள் தூள், மிளகாய், கருவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.
  9. பின் தக்காளி விழுது, மிளகாய் தூள், சீரகம் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து வதக்கவும்.
  10. சிறிது தண்ணீர் சேர்த்து கட் செய்த முட்டை ரோலை சேர்த்து மசாலா திக் ஆகும்வரை மூடி போட்டு சிம்மில் கொதிக்க விடவும்.
  11. பின்னர் தக்காளி சாஸ், முந்திரி விழுது சேர்த்து கலந்துவிட்டு கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்