Photo of Lamb brain gravy by Asiya Omar at BetterButter
347
3
0.0(1)
0

Lamb brain gravy

Dec-24-2017
Asiya Omar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ஆட்டுமூளை -1
  2. எண்ணெய் - 1-2 மேஜைக்கரண்டி
  3. வெங்காயம் -2 நறுக்கியது
  4. சிறிய தக்காளி -1
  5. பச்சை மிளகாய் - நறுக்கியது -1
  6. மஞ்சள் தூள்,கரம்மசாலா - 2 பின்ச்
  7. சீரகத்தூள் - அரை தேக்கரண்டி
  8. மிளகாய்த்தூள் - 1/4 தேக்கரண்டி விரும்பினால் சேர்க்கலாம்.
  9. மிளகு பொடித்தது - 1 தேக்கரண்டி
  10. உப்பு - சுவைக்கு.
  11. முட்டை -1 ( விரும்பினால்)
  12. கருவேப்பிலை -1 இணுக்கு.
  13. அலங்கரிக்க மல்லி இலை.

வழிமுறைகள்

  1. முதலில் தண்ணீரில் போட்டு அலசவும்.ஆட்டு மூளையயின் மேல் இருக்கும் மெல்லிய ஏடு போன்றதை எடுக்கவும். நான்கு அல்லது எட்டு சிறிய துண்டாகப் போடவும்.
  2. கடாயில் எண்ணெய் விடவும்.சூடானவுடன் வெங்காயம,கறிவேப்பிலை சேர்த்து வதக்கி இஞ்சி பூண்டு சேர்க்கவும். இளஞ்சிவப்பாக வதக்கி தக்காளி,பச்சை மிளகாய் சேர்க்கவும் .உப்பு சிறிது பார்த்து சேர்த்து வதக்கவும்.
  3. பொடித்த மிளகு தவிர அனைத்து மசாலாவும் சேர்க்கவும்.சிறிது தண்ணீர் சேர்த்து பிரட்டவும்.
  4. மூளை சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து பிரட்டவும்.
  5. 5 நிமிடத்தில் வெந்து விடும். விரும்பினால் ஒரு முட்டை கலந்து சேர்க்கலாம்.
  6. அடுப்பை அணைக்கும் முன்பு பொடித்த மிளகு சேர்க்கவும்.
  7. நறுக்கிய மல்லி இலை தூவி அலங்கரிக்கவும்
  8. சுவையான மூளை பிரட்டல் தயார். சாதம்,சப்பாத்திக்கு பக்க உணவாகப் பரிமாறலாம்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Dec-25-2017
Pushpa Taroor   Dec-25-2017

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்