ஆலு கோபி சப்ஜி | Aloo Gobi Sabji in Tamil

எழுதியவர் Asiya Omar  |  25th Dec 2017  |  
5 from 1ரிவியூ மதிப்பீடு செய்
  • Aloo Gobi Sabji recipe in Tamil,ஆலு கோபி சப்ஜி, Asiya Omar
ஆலு கோபி சப்ஜிAsiya Omar
  • ஆயத்த நேரம்

    10

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    10

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    2

    மக்கள்

2

1

3 votes
ஆலு கோபி சப்ஜி recipe

ஆலு கோபி சப்ஜி தேவையான பொருட்கள் ( Ingredients to make Aloo Gobi Sabji in Tamil )

  • உருளைக்கிழங்கு 100 கிராம்
  • காளிப்ளவர் -100 கிராம்
  • நடுத்தர வெங்காயம் -1
  • நடுத்தர தக்காளி -1
  • மல்லி இலை சிறிது
  • இஞ்சி பூண்டு விழுது -1 தேக்கரண்டி
  • மிளகாய்த்தூள் -1/2 தேக்கரண்டி
  • கரம் மசாலா -1/4 தேக்கரண்டி
  • எண்ணெய் -1 மேஜைக்கரண்டி
  • உப்பு - தேவைக்கு.

ஆலு கோபி சப்ஜி செய்வது எப்படி | How to make Aloo Gobi Sabji in Tamil

  1. உருளைக்கிழங்கு தோல் நீக்கி துண்டாக்கிக் கொள்ளவும்.காளிப்ளவர் வெந்நீரில் போட்டு சிறிய பூக்களாகப் பிரிக்கவும்.
  2. குக்கரில் எண்ணெய் விட்டு சூடாக்கி நறுக்கிய வெங்காயம் வதக்கவும்,இஞ்சி பூண்டு கரம் மசாலா சேர்த்து வதக்கி தக்காளி சேர்க்கவும்.உப்பு சேர்த்து வதங்க விடவும்.
  3. மிளகாய்த்தூள் சேர்த்து பிரட்டவும்.உருளக்கிழங்கு,காளிப்ளவர் சேர்க்கவும்.
  4. குக்கரை 2 விசில் விட்டு அடுப்பை அணைக்கவும்.
  5. சுவையான ஆலு கோபி சப்ஜி தயார் .நறுக்கிய மல்லி இலை சேர்த்து பிரட்டவும்.
  6. சப்பாத்தி,பூரி ப்ரைட் ரைஸ் உடன் பரிமாறலாம்.
  7. பவுலில் எடுத்துப் பரிமாறவும்

எனது டிப்:

குக்கரில் வைப்பதால் சுலபமாக செய்து விடலாம்.

Reviews for Aloo Gobi Sabji in tamil (1)

Pushpa Taroor2 years ago

Good
Reply
Asiya Omar
2 years ago
thanks.

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.