வீடு / சமையல் குறிப்பு / மோர் குழம்பு

Photo of Mor Kuzhambu by saranya sathish at BetterButter
543
5
0.0(0)
0

மோர் குழம்பு

Dec-28-2017
saranya sathish
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மோர் குழம்பு செய்முறை பற்றி

தேங்காய் சீரகம் பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து மோரில் கலந்து செய்த சுவையான குழம்பு.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மோர் - 1 கப்
  2. தேங்காய் துருவல் - 1/2 கப்
  3. மல்லி விதை - 1 டேபிள் ஸ்பூன்
  4. சீரகம் - 1 டீஸ்பூன்
  5. பச்சை மிளகாய் - 2
  6. கடுகு - 1 டீஸ்பூன்
  7. மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
  8. வெந்தயம் - 1/4 ஸ்பூன்
  9. சிவப்பு மிளகாய் - 1
  10. தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
  11. கறிவேப்பிலை, உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. தேங்காய் துருவல், பச்சை மிளகாய், மல்லி விதை, சீரகம், மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி மிக்சியில் நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  2. பின்னர் ஒரு வாணலியில் மோரை ஊற்றி அடுப்பில் வைத்து சூடேற்றி, பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளறி தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
  3. கொதிக்க வைக்க கூடாது. மிதமான தீயில் இரண்டு நிமிடம் வைத்து இறக்கி வைக்கவும்.
  4. ஒரு கடாயை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, சிவப்பு மிளகாய் சேர்த்து தாளித்து குழம்புடன் சேர்த்து கலக்கி பின் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்