வீடு / சமையல் குறிப்பு / இறால் மசாலா (தேங்காய் சேர்த்தது)

Photo of Prawn Masala ( Coconut added) by Asiya Omar at BetterButter
496
4
0.0(0)
0

இறால் மசாலா (தேங்காய் சேர்த்தது)

Dec-29-2017
Asiya Omar
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

இறால் மசாலா (தேங்காய் சேர்த்தது) செய்முறை பற்றி

இறால் மசாலாவுடன் தேங்காய் சேர்த்து செய்தால் அது குழம்பாகவும் அல்லாமல் கிரேவியாகவுமில்லாமல் கெட்டியாக ருசியாக இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. இறால் -1 கிலோ
  2. எண்ணெய் - 3- 4 மேஜைக்கரண்டி
  3. நறுக்கிய வெங்காயம் பெரியது -2
  4. இஞ்சிபூண்டு விழுது -2 தேக்கரண்டி
  5. நறுக்கிய தக்காளி பெரியது -2
  6. நறுக்கிய பச்சை மிளகாய் -2
  7. மல்லி,கருவேப்பிலை - சிறிது
  8. இறாலுடன் பிரட்டி வைக்க:-
  9. மிளகாய்த்தூள் -2 தேக்கரண்டி
  10. மஞ்சள் தூள்- கால் - அரை தேக்கரண்டி
  11. மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
  12. சீரகம்,சோம்புத்தூள் -தலா அரை தேக்கரண்டி
  13. கரம் மசாலா - கால் தேக்கரண்டி(ஏலம்,பட்டை கிராம்பு)
  14. பாதி எலுமிச்சைப் பழம்.
  15. உப்பு - சுவைக்கு.
  16. அரைக்க :-
  17. தேங்காய் கால் கப் + முந்திரி 2.

வழிமுறைகள்

  1. இறாலை தோல் எடுத்து தலை நீக்கி, அதில் இருக்கும் கருப்பை சுத்தம் செய்து நன்கு அலசி வைக்கவும்.
  2. 1 கிலோ இறாலை உரித்தால் 600 கிராம் தான் வரும்.
  3. மேற்கூறிய படி மசாலாவில் பிரட்டி வைக்கவும்.
  4. பொடியாக வெங்காயம,மிளகாய், தக்காளி நறுக்கி வைக்கவும். தேங்காய் அரைத்து வைக்கவும்.
  5. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானவுடன் கறிவேப்பிலை,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அடுத்து வெங்காயம்,மிளகாய்,தக்காளி,உப்பு சேர்த்து நன்கு வதக்கி 5 நிமிடம் மூடினால் கூட்டு போல் ஆகும்.
  6. அத்துடன் ஊற வைத்த இறால் சேர்த்து பிரட்டி வேக வைக்கவும்.
  7. நன்கு வெந்தவுடன் தேங்காய் சேர்க்கவும்.எல்லாம் சேர்ந்து கெட்டியாகி வரும் .நறுக்கிய மல்லி இலை தூவி பிரட்டி அடுப்பை அணைக்கவும்.
  8. இது வெறும் சோறு,ரசம் முதல் பிரியாணி,புலாவ்,சப்பாத்தி,ரொட்டி,ஆப்பம்உடன் கூட பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்