கார  குழம்பு | Kara Kuzhambu in Tamil

எழுதியவர் Surya Rajan  |  2nd Jan 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Kara Kuzhambu by Surya Rajan at BetterButter
கார  குழம்புSurya Rajan
 • ஆயத்த நேரம்

  5

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  25

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  3

  மக்கள்

13

0

0 votes
கார  குழம்பு recipe

கார  குழம்பு தேவையான பொருட்கள் ( Ingredients to make Kara Kuzhambu in Tamil )

 • நல்லெண்ணெய் : 4 மேஜைக்கரண்டி
 • உப்பு : தேவையான அளவு
 • சின்ன வெங்காயம் : 5 -10
 • தக்காளி : 1
 • மிளகாய் : 2
 • மஞ்சள் தூள் : ½  மேஜைக்கரண்டி
 • புளி : நெல்லி அளவு
 • பெருங்காய தூள் : சிறிதளவு
 • வறுத்து அரைக்க
 • சிவப்பு மிளகாய்  : 4
 • சீரகம் : ½ மேஜைக்கரண்டி
 • மல்லி : 1 மேஜைக்கரண்டி
 • அரிசி : ½ மேஜைக்கரண்டி
 • அரைக்க : (தேங்காய் விழுது )
 • தேங்காய் : 1 கையளவு
 • சின்ன வெங்காயம் : 5
 • தாளிக்க :
 • கடுகு : 1 மேஜைக்கரண்டி
 • சின்ன வெங்காயம் : 2
 • கருவேப்பிலை : சிறிதளவு
 • வெந்தயம் : ¼ மேஜைக்கரண்டி

கார  குழம்பு செய்வது எப்படி | How to make Kara Kuzhambu in Tamil

 1. வறுத்து அரைக்க கொடுக்கப்பட்டுள்ளதை வெறும் வாணலியில் 2 நிமிடம் மிதமான தீயில் வறுத்து எடுத்து கொள்ளவும். பின் அதனை மையாக தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளவும்
 2. ஒரு கடாயில் நல்லெண்ணெய் விட்டு வெங்காயம் , தக்காளி , மிளகாய் மஞ்சள் தூள் சேர்த்து  1 நிமிடம் வதக்கவும் .
 3. பின் வறுத்து அரைத்த மசாலா சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்
 4. பின் புளி தண்ணீர் , உப்பு , தேவையான தண்ணீர் ஊற்றி மசாலா வாசனை போகும் வரை 15 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
 5. குழம்பில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும் வேளையில் அரைத்து வைத்துள்ள தேங்காய் மற்றும் சின்ன வெங்காய விழுது சேர்த்து 5 - 10 நிமிடம் மிதமான தீயில் குழம்பினை கொதிக்க விடவும் .
 6. மற்றொரு வாணலியில் நல்லெண்ணெய்  விட்டு கடுகு, வெந்தயம் , சின்ன வெங்காயம் , கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும் .
 7. மேற்சொன்ன தாளிப்பினை குழம்பில் சேர்த்து 2 நிமிடம் கழித்து பெருங்காய தூள் சேர்த்து அடுப்பினை ஆப் செய்யவும்  .

Reviews for Kara Kuzhambu in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.