வீடு / சமையல் குறிப்பு / மீன் முட்டை வெண்டைக்காய் காரத் தொக்கு

Photo of Fish egg- Lady's  finger  gravy by Jeny  at BetterButter
355
3
0.0(0)
0

மீன் முட்டை வெண்டைக்காய் காரத் தொக்கு

Jan-02-2018
Jeny
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மீன் முட்டை வெண்டைக்காய் காரத் தொக்கு செய்முறை பற்றி

மீன் முட்டையுடன் வெண்டைக்காய் சேர்ந்த இதன் ருசி சுடு சாதத்துடன் சற்று தூக்கலாக இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மீன் முட்டை - 200 கி
  2. வெண்டைக்காய் - 4
  3. சிறிய வெங்காயம் - 50 கி
  4. தக்காளி - 2 (அரைத்த விழுது)
  5. பூண்டு - 4
  6. இஞ்சி - பூண்டு விழுது - 1 ஸ்பூன்
  7. பச்ச மிளகாய் - 1
  8. சீரகத்தூள் - 1/2 ஸ்பூன்
  9. மிளகுத்தூள் - 1/2 ஸ்பூன்
  10. மிளகாய் தூள் (தேவைக்கு )
  11. மல்லித்தூள் - 1 ஸ்பூன்
  12. எலுமிச்சை சாறு - Iமேஜைக்கரண்டி
  13. கடுகு 1/4 ஸ்பூன்
  14. சீரகம் 1/4 ஸ்பூன்
  15. மிளகு - 1/4 ஸ்பூன்
  16. சோம்பு - 1/4 ஸ்பூன்
  17. உப்பு தேவைக்கு

வழிமுறைகள்

  1. 4 பிஞ்சு வெண்டைக்காயைக் நீளவாக்கில் கீறி உப்பு ,சீரகத் தூள் , மிளகுத்தூள், தடவி 10 நிமிடம் கழித்து தோசைக்கல்லில் பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.
  2. மீன் முட்டையைக் கழுவி உப்பு ,மஞ்சள் தூள் , எலுமிச்சை சாறு சேர்த்து பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
  3. வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி , கடுகு , சீரகம் , மிளகு , சோம்பு தாளித்து , பூண்டு , சிறிய வெங்காயம், பச்சமிளகாய் போட்டு வதக்கவும்.
  4. பின் இஞ்சி-பூண்டு விழுது , மிளகாய் தூள், மல்லித்தூள் 1 ஸ்பூன் போட்டு வதக்கி கொள்ளவும் .
  5. தக்காளி விழுது சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து , எண்ணெய் பிரிந்து வரும் போது , மீன் முட்டை போட்டு ,மூடி போட்டு மிதமான தீயில்வேக விடவும்
  6. 10 நிமிடம் கழித்து வதக்கிய வெண்டக்காய் சேர்த்து 2 நிமிடம் கிளறி பின் , கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்