வீடு / சமையல் குறிப்பு / கொய்யா குழம்பு

Photo of GUAVA CURRY by Munsila Fathima at BetterButter
651
3
0.0(0)
0

கொய்யா குழம்பு

Jan-02-2018
Munsila Fathima
7 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கொய்யா குழம்பு செய்முறை பற்றி

கொய்யாவின் சிறப்பு அனைவரும் அறிந்ததே. அதை வைத்து இப்படியும் எளிதில் குழம்பு செய்யலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கொய்யா பழம் - 2
  2. ப்ளாக் சால்ட், எண்ணெய் - தேவைக்கு
  3. மிளகாய் தூள் - 1 - 2 தேக்கரண்டி
  4. கரம் மசாலா - 1 தேக்கரண்டி
  5. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
  6. தயிர் - 1 1/2 மேஜைக்கரண்டி
  7. தண்ணீர் - 2 டம்ளர்
  8. சோம்பு தூள் - 1/8 தேக்கரண்டி
  9. சோள மாவு - 1 - 1 1/2 தேக்கரண்டி
  10. பூண்டு பொடி - 1 தேக்கரண்டி
  11. தாளிக்க:
  12. பிரியாணி இலை - ஒன்றில் பாதி
  13. கருவேப்பிலை - கொஞ்சம்
  14. சீரகம் - 1/4 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடேறியதும் தாளிக்க வேண்டிய பொருளை கொண்டு தாளிக்க வேண்டும்.
  2. அதனுடன் நறுக்கிய கொய்யாப்பழத்தை சேர்த்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு,பூண்டு பொடி, சோம்பு தூள், சேர்த்து 5 நிமிடம் நன்கு பிரட்டவும்.
  3. தயிருடன் தண்ணீர் சேர்த்து நன்கு அடித்து வதக்கிய கொய்யாவுடன் சேர்த்து நன்கு கொதிக்க விடவும் .
  4. கொஞ்சம் சோள மாவை தண்ணீர் உடன் சேர்த்து நன்கு கரைத்து கொதிக்கும் குழம்புடன் சேர்க்கவும்.
  5. இறுதியில் கரம் மசாலா தூவி கொள்ளுங்கள்.
  6. மல்லி இலை தூவி பரிமாறுங்கள்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்