வீடு / சமையல் குறிப்பு / சிவப்பு அவல் பொங்கல்

Photo of Red Poha pongal by Krishnasamy Vidya Valli at BetterButter
712
7
0.0(0)
0

சிவப்பு அவல் பொங்கல்

Jan-05-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சிவப்பு அவல் பொங்கல் செய்முறை பற்றி

அரிசி கொண்டு செய்யப்படும் வெல்லப்பொங்கலைவிட இதில் குறைந்த அளவே நெய் தேவைப்படும். செய்வதும் சுலபம் . அதிக நேரம் அடுப்பில் வைத்து கிளற தேவையில்லை. இந்த பொங்கலுக்கு வித்தியாசமான ஆரோக்கியமான சிவப்பு அவல் பொங்கல் செய்து பாருங்கள்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • ஃப்யூஷன்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சிவப்பு கெட்டி அவல் - 1 / 2 கப்
  2. பாசிப்பருப்பு - 1 / 4 கப்
  3. பால் - 1 1/2 கப்
  4. வெல்லம் - 3 / 4 கப்
  5. நெய் - 4 தேக்கரண்டி
  6. முந்திரி பருப்பு - 10
  7. தேங்காய் துருவல் - 1 தேக்கரண்டி / தேங்காய் பல்லுகீறியது - 1 தேக்கரண்டி
  8. ஏலக்காய் பொடி - 2 சிட்டிகை

வழிமுறைகள்

  1. பாசிப்பருப்பை சிறிது நெய் விட்டு வறுக்கவும்
  2. நல்ல வாசனை வந்ததும் தனியே எடுத்து சிறிது தண்ணீர் சேர்த்து ஊறவைத்து பின்னர் குக்கரில் வேக வைக்கவும்
  3. சிவப்பு அவலை மிக்ஸியில் ரவை பதத்திற்கு பொடி செய்து கொள்ளவும்
  4. கடாயில் சிறிது நெய் விட்டு பொடித்த அவலை வறுத்துக்கொள்ளவும்
  5. வறுத்ததை பால் சேர்த்து ஊறவிடவும்
  6. வெல்லத்தை சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும் விருப்பப்பட்டால் வடிகட்டிக்கொள்ளலாம்
  7. வெல்லக்கரைசல் கெட்டியானவுடன் வேகவைத்த பாசிப்பருப்பு மற்றும் பாலில் ஊறவைத்த அவல் சேர்த்து கிளறவும்
  8. ஏலக்காய் பொடி தூவி ஒரு தேக்கரண்டி நெய்விட்டு சூருள கிளறி இறக்கவும்
  9. மீதமுள்ள நெய்யில் முந்திரி பருப்பு தேங்காய் துருவல்/பல்லுகீறியது வறுத்து சேர்த்தால் சுவையான சிவப்பு அவல் பொங்கல் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்