வீடு / சமையல் குறிப்பு / ஏழுகாய் பொங்கல் கூட்டு/குழம்பு

Photo of 7 vegitable pongal special kuttu/kuzhambu by Krishnasamy Vidya Valli at BetterButter
520
6
0.0(0)
0

ஏழுகாய் பொங்கல் கூட்டு/குழம்பு

Jan-09-2018
Krishnasamy Vidya Valli
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஏழுகாய் பொங்கல் கூட்டு/குழம்பு செய்முறை பற்றி

சில இடங்களில் பொங்கலுக்கு ஸ்பெஷலாக இதை செய்வார்கள். நாட்டு காய்கள் மற்றும் மொச்சை/கடலை போட்டு செய்வார்கள்.

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • ஈஸி
 • பண்டிகை காலம்
 • தமிழ்நாடு
 • பிரெஷர் குக்
 • சைட் டிஷ்கள்
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

 1. நாட்டு காய்கள் நறுக்கியது - 2 கப் ( தடியங்காய் பூசணிக்காய் சீனிகிழங்கு சேப்பங்கிழங்கு சிறுகிழங்கு கத்தரிக்காய் அவரைக்காய் சீனி அவரைக்காய் வாழைக்காய் இதில் ஏதாவது ஏழுகாய் சேர்க்கவும் )
 2. துவரம்பருப்பு - 1 / 4 கப்
 3. மொச்சை /கடலை - 1 / 4 கப் ( பச்ச யாக இருந்தால் அப்படியே உபயேகிக்கலாம் காய்ந்ததாக இருந்தால் 6 மணிநேரம் ஊறவைக்கவும் )
 4. உப்பு - 1 1 / 4 தேக்கரண்டி
 5. மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி
 6. புளி - ஒரு நெல்லிக்காய் அளவு
 7. வெல்லம் - ஒரு சிறிய துண்டு ( விருப்பப்பட்டால் )
 8. வறுத்து திரிக்க
 9. கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு கொத்தமல்லி விதை - தலா 1 தேக்கரண்டி
 10. மிளகாய் வத்தல் - 5 அல்லது 6
 11. கட்டி பெருங்காயம் - 1 சிறிய துண்டு
 12. தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி
 13. எண்ணெய் - 2 டிராப்ஸ்
 14. தாளிக்க கடுகு - 1 தேக்கரண்டி
 15. கருவேப்பிலை - 2 ஆர்க்கு
 16. எண்ணெய் - 1 தேக்கரண்டி
 17. மிளகாய் வத்தல் - 1
 18. பெருங்காயம் - 2 சிட்டிகை

வழிமுறைகள்

 1. காய்கள் நறுக்கி கொள்ளவும் மொச்சை / கடலை பச்சயாக இருந்தால் அதை அப்படியே குக்கரில் வேக வைக்கவும் காய்ந்ததாக இருந்தால் ஊறவைத்து வேக வைக்கவும் முளைகட்டிய தானியங்கள் கூட சேர்க்கலாம்
 2. துவரம்பருப்பை குக்கரில் குழைய வேக வைக்கவும்
 3. குக்கரில் காய்களுடன் புளி கரைசல் உப்பு மஞ்சள் பொடி சேர்த்து ஒரு விசில் வேக வைக்கவும்
 4. வறுத்து திரிக்க கொடுத்தவற்றை சேர்த்து வறுத்து கொள்ளவும்
 5. மிக்ஸியில் கரகரப்பாக திரிக்கவும்
 6. வேகவைத்த மொச்சை / கடலை துவரம்பருப்பு வறுத்து திரித்தது சேர்த்து ஒரு கொதி விடவும்
 7. விருப்பப்பட்டால் ஒரு துண்டு வெல்லம் சேர்த்து இறக்கவும்
 8. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளிக்கவும்
 9. தாளித்ததை சேர்த்து பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்