செட்டிநாடு தேன்குழல் | Chettinaad Thenkulal in Tamil

எழுதியவர் Adaikkammai annamalai  |  9th Jan 2018  |  
3.2 from 4 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Chettinaad Thenkulal recipe in Tamil,செட்டிநாடு தேன்குழல், Adaikkammai annamalai
செட்டிநாடு தேன்குழல்Adaikkammai annamalai
 • ஆயத்த நேரம்

  20

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  15

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

16

4

18 votes
செட்டிநாடு தேன்குழல் recipe

செட்டிநாடு தேன்குழல் தேவையான பொருட்கள் ( Ingredients to make Chettinaad Thenkulal in Tamil )

 • பச்சரிசி - 4 டம்ளர்
 • உளுந்து -300 gm
 • பொட்டுக்கடலை - 50 gm
 • எண்ணெய் - சூடு செய்து சேர்த்து பிசைவதற்கு சிறிது.., பொரிப்பதற்கு எண்ணெய்
 • உப்பு - தேவையான அளவு
 • தண்ணீர் - பிசைவதற்கு

செட்டிநாடு தேன்குழல் செய்வது எப்படி | How to make Chettinaad Thenkulal in Tamil

 1. முதலில் பச்சரிசி 4 டம்ளர் எடுத்து ஊற வைக்கவும். அதன் பின் அதை அலசி எடுத்து ஒரு துணியில் காயவைக்கவும்
 2. காய்ந்த பின் அதை மிக்ஸ்யில் அரைத்து கொள்ளவும் . அரைத்து எடுத்து அதை சலித்து கொள்ளவும் . 4 டம்ளர் பச்சரிசி மாவு எடுத்து கொள்ளவும்
 3. அப்படி பச்சரிசி மாவு கடையில் கிடைத்தால் பச்சரிசி மாவு வாங்கி 4 டம்ளர் எடுத்து சலித்து எடுத்து கொள்ளவும்.
 4. அடுத்தது உளுந்தபருப்பை லேசாக வறுத்து ரொம்பவும் சிவக்காமல் நடு நிலையாக வறுத்து எடுத்து கொள்ளவும்
 5. அதன் பின் மிஸ்யில் வறுத்த உளுந்து மற்றும் பொட்டுகடலையை சேர்த்து அரைத்து எடுத்து சலித்து வைத்து கொள்ளவும்
 6. சலித்து வைத்த பச்சரிசி மாவு மற்றும் உளுந்த மாவை ஒன்றாக சேர்த்து சிறிது உப்பு போட்டு சேர்த்து கிளறவும்
 7. அதனுடன் எண்ணெய் 3 ஸ்பூன் சூடு செய்து அந்த மாவில் சேர்க்கவும்
 8. தேவையான அளவு தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து மாவை பிசைந்து எடுத்து கொள்ளவும் முறுக்கு பிழியும் பதத்திற்கு .
 9. தேன்குழல் முறுக்கு மாவு தயார்
 10. இருப்புசட்டியில் எண்ணையோ அல்லது டால்டாவோ பொரிக்கும் அளவிற்கு சேர்க்கவும்
 11. எண்ணெய் நன்றாக காய்ந்த பின் அடுப்பை சிம்மில் வைக்கவும்.
 12. முறுக்கு அச்சை கொண்டு கையில் எண்ணெய் தொட்டு மாவை எடுத்து உருட்டி குழலில் வைத்து அடுப்பை சிம்மில் வைத்து நேரடியாக அடுப்பில் பிழியவும்.
 13. குமிழ் அடங்கிய பின் மெதுவக திருப்பி போட்டு சிவக்காமல் எடுக்கவும்.
 14. சுவையான செட்டிநாடு தேன்குழல் தயார்

எனது டிப்:

பச்சரிசி மாவு கடையில் வாங்கி கூட சலித்து சேர்க்கலாம். மற்றும் முறுக்கு வெந்த பதம் , எண்ணெயில் குமிழ்கள் அடங்கியதின் அடையாளம்.

Reviews for Chettinaad Thenkulal in tamil (4)

Ummu Jaziba year ago

வறுத்தமாவு சேர்த்து செய்யலாமா?
Reply
Adaikkammai annamalai
a year ago
pacharisi varutha maavilum seiyalam sis.. varukavillai uendral vellayaga varum varuthaal konja sivappagavey thaan varum
Ummu Jazib
a year ago
Thanks sis

neela karthika year ago

Hi idly rice la panna mudiyuma measurement ple
Reply
Adaikkammai annamalai
a year ago
idly rice la panalam sis .. but hard ah irukum soft ah vaaraathu.. pacharisi tha soft ah varum..

Nazeema Banua year ago

Cryspy nd tasty
Reply
Nazeema Banu
a year ago
Superb
Adaikkammai annamalai
a year ago
tq
Vitaladevuni Subramaniam
a year ago
Kandippaha vezhi nattil ullavarhallukku thevaiyanatips

Paramasivam Sumathia year ago

Superb taste... I used to do this method only
Reply
Adaikkammai annamalai
a year ago
oh super sis... its comfortable for every one